/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துபாயில் மேயர்கள் மாநாடு திருப்பூர் மேயர் பங்கேற்பு
/
துபாயில் மேயர்கள் மாநாடு திருப்பூர் மேயர் பங்கேற்பு
துபாயில் மேயர்கள் மாநாடு திருப்பூர் மேயர் பங்கேற்பு
துபாயில் மேயர்கள் மாநாடு திருப்பூர் மேயர் பங்கேற்பு
ADDED : அக் 26, 2025 03:01 AM

திருப்பூர்: ஆசிய - பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 164 நகரங்களின் மேயர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு துபாயில் மூன்று நாள் நடக்கிறது. இதில், தென்மாநில அளவில் திருப்பூர் மேயர் பங்கேற்கவுள்ளார்.
ஆசிய - பசிபிக் நகரங்களின் மேயர்கள் உச்சி மாநாடு நடப்பாண்டு துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நாளை (27ம் தேதி) துவங்கி 29 வரை நடக்கிறது. இம்மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் மேயர் பங்கேற்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசுகின்றனர்.
அவ்வகையில், 2025ம் ஆண்டு ஆசிய பசிபிக் நகரங்களின் மேயர்கள் மாநாட்டில், 164 நகரங்களின் மேயர்கள் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து மொத்தம் ஆறு மேயர்கள் கலந்து கொள்கின்றனர். தென் மாநில அளவில் தமிழகத்தின் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் கலந்து கொள்ள புறப்பட்ட அவர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இன்று காலை சென்னையிலிருந்து அவர் துபாய் சென்று மூன்று நாள் மாநாட்டில் ஐந்து தலைப்புகளில் பேசுகிறார்.
உலகளாவிய ஆலோசனைகள்: பெறுவதற்கான வாய்ப்பு: மாநாட்டில் பங்கேற்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், நகர்ப்புற வாழ்க்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் ஒரு முன்னணி தளமாக உள்ளது. 1996ல் பிரிஸ்பேனில் துவங்கி, 600க்கும் மேற்பட்ட நகரங்களை இதில் இணைத்துள்ளது.
டிஜிட்டல் மாற்றம் மற்றும் நகர்ப்புற எதிர்காலம், நகரத் தலைமை மற்றும் பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைத் தரம் மற்றும் சுற்றுச்சூழல் தீர்வுகள் மற்றும் நகர்ப்புற மீளுருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இம்மாநாட்டின் கருப்பொருள் அமைகிறது. தங்கள் நகரத்தை எவ்வகையில் முன்னேற்றலாம் என்ற உலகளவிலான ஆலோ சனைகளை பெற ஒரு வாய்ப்பாக அமையும்.
- தினேஷ்குமார்: மேயர்:

