/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் - மூணாறு பஸ் இயக்கம் துவங்கியது
/
திருப்பூர் - மூணாறு பஸ் இயக்கம் துவங்கியது
ADDED : மே 31, 2025 05:15 AM

திருப்பூர்; இருமாநில பயணிகள் வசதிக்காக திருப்பூர் - மூணாறு இடையே பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதியம், 2:30 மணிக்கு பஸ் (டி.என்., 39 என் 0615) புறப்படுகிறது. மாலை, 4:15 க்கு பல்லடம் வழியாக உடுமலை செல்லும் பஸ், சின்னாறு, மறையூர் வழியாக பயணித்து, இரவு 9:00க்கு மூணாறு சென்று சேருகிறது.
மூணாறில் காலை 6:30 மணிக்கு புறப்பட்டு, காலை, 10:30க்கு உடுமலை வந்து, மதியம், 2:30 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. திருப்பூரில் இருந்து மூணாறு பயணிக்க பயணி ஒருவருக்கு கட்டணம், 125 ரூபாய்.
திருப்பூரில் இருந்து நேரடியாக மூணாறு இதுவரை பஸ் இல்லை. உடுமலை சென்று அங்கிருந்து பஸ்களில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது இரு மாநில பயணிகள் வசதிக்காக திருப்பூரில் நேரடி பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.