/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 05, 2011 12:39 AM
உடுமலை : உடுமலையில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்
சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கிளைச்சங்கத்தின் தலைவர்
பழனிச்சாமி தலைமை வகித்தார். உதவிச் செயலர் சிக்கந்தர் வரவேற்றார்.
பொதுக்குழுவை துவக்கி வைத்து பி.எஸ்.என்.எல்.இ.யூ., வின் உடுமலை கிளைச்
செயலர் வெங்கடேசனும், கூட்டத்தின் நோக்கம் குறித்து,
டி.என்.டி.சி.,டபள்யு.யு., செயலாளர் தங்கவேல் பேசினார்.பி.எஸ்.என்.எல்.,
மாவட்ட தலைவர் சக்திவேல், ஒப்பந்த ஊழியர்கள் உறுப்பினர்களுக்கு இ.எஸ்.ஐ.,
அடையாள அட்டையினை வழங்கி, 'கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் வரும் 7ம்
தேதி தொழிற்சங்க வகுப்பு நடைபெறுகிறது. இதில், இ.எஸ்.ஐ., மற்றம் பி.எப்.,
குறித்து சென்னை சட்ட அமலாக்க அதிகாரி பொன்துரை பேச உள்ளார். எனவே,
வகுப்பில், அனைவரும் பங்கேற்க வேண்டும்,' என்றார். மாவட்ட இணைச் செயலர்
விஜயன் நன்றி கூறினார்.