/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பெற கணக்கு துவங்க தபால் துறை அறிவுரை
/
அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பெற கணக்கு துவங்க தபால் துறை அறிவுரை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பெற கணக்கு துவங்க தபால் துறை அறிவுரை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பெற கணக்கு துவங்க தபால் துறை அறிவுரை
ADDED : ஆக 05, 2011 12:43 AM
திருப்பூர் : மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற,
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போர், தபால் அலுவலகங்களில் தங்களது பெயரில்
புதிதாக கணக்கு துவங்க வேண்டும் என தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.வறுமை
கோட்டுக்கு கீழுள்ள ஏழை மற்றும் பாமரர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை,
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அடிப்படை தேவைக்காக ஒவ்வொரு
மாதமும் குறிப்பிட்ட தொகை வழங்குகிறது. இத்தொகை முழுவதும் நேரடியாக
பயனாளிகளுக்கு சென்று சேருவதில்லை.உதாரணமாக, 500 ரூபாய் வழங்கப்படுகிறது
எனில், பயனாளிகளுக்கு 400 ரூபாய் மட்டுமே சென்றடைகிறது. பணம் பெறுபவர்கள்
பலர் படிக்காதவர்கள், கைரேகை மட்டுமே வைக்க தெரிந்தவர்களாக இருப்பதால்,
காரணம் கேட்காமல், கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.'இந்த மாதம்,
இவ்வளவு ரூபாய் தான் அரசு உங்களுக்கு அனுப்பியது,' எனக் கூறி ஏமாற்றி
விடுகின்றனர். இதனால், அரசின் பெயர் கெடுவதுடன், பயனாளிகளும் மிக எளிதாக
ஏமாற்றப்படுகின்றனர். இவற்றை தடுக்க, அரசின் நலத்திட்ட உதவிகளை தபால்
அலுவலகங்கள் மூலம் நேரடியாக வழங்குவது என மத்திய, மாநில அரசுகள் முடிவு
செய்துள்ளன.தமிழகத்தில் உள்ள மாவட்டம் முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ்
வசிப்போர் பட்டியல் தயார் செய்யப்பட்டு தபால் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதாக
முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இவர்கள், உடனடியாக தங்களது பெயர்களை பதிவு
செய்து கொள்ளும்படி, திருப்பூர் தலைமை தபால் நிலைய அலுவலர் சம்பத்
தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,''முதல்கட்டமாக, போஸ்ட்மேன் மூலம்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள
வேண்டும்; நிதி நேரடியாக உங்களுக்கே வரும்; நீங்கள் கையேழுத்து போட்டால்
மட்டுமே பெற முடியும் என அறிவுறுத்தும்படி கூறியுள்ளோம். இலவசமாக அல்லது 20
ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு கணக்கு துவங்கப்படும். வறுமை கோட்டுக்கு
கீழ் வசிப்போர் கட்டாய கணக்கு துவங்க வேண்டும். அதற்கு, அடையாள சான்று
கொண்டு வர வேண்டும்,'' என்றார்.