/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நில அபகரிப்பு விசாரணையை துரிதப்படுத்த?வசதி
/
நில அபகரிப்பு விசாரணையை துரிதப்படுத்த?வசதி
ADDED : ஆக 05, 2011 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : நில அபகரிப்பு குறித்த விசாரணையை துரித்தப்படுத்தவும்,
போலீசாரின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பான விசாரணைக்கு, போலீசாருக்கு தேவையான வசதிகளை
செய்துகொள்ள, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்பூர்
மாவட்டத்தில் குற்ற ஆவணங்கள் காப்பக டி.எஸ்.பி., கவுதமன் தலைமையில்,
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ஆனந்த் மற்றும் போலீசார் அடங்கிய
தனிப்படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்காக தனியாக டெம்போ
டிராவலர் வாகனம், இரண்டு ஜீப், மொபைல் போன் மற்றும் லேண்ட் லைன் போன் வசதி
செய்யப்பட்டுள்ளது.