sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டிரைவர், கண்டக்டர் இல்லாமல் தாமதமாகும் பஸ்கள்

/

டிரைவர், கண்டக்டர் இல்லாமல் தாமதமாகும் பஸ்கள்

டிரைவர், கண்டக்டர் இல்லாமல் தாமதமாகும் பஸ்கள்

டிரைவர், கண்டக்டர் இல்லாமல் தாமதமாகும் பஸ்கள்


ADDED : செப் 16, 2011 01:26 AM

Google News

ADDED : செப் 16, 2011 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இல்லாமல், தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பாதிப்படைகின்றனர்.திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் - நம்பியூர் வழித்தடங்களில் உள்ள கிராமங்கள்; பி.என்., ரோடு - நெருப்பெரிச்சல்; சிறு

பூலுவப்பட்டி ரிங் ரோடு - வஞ்சிபாளையம், அம்மாபாளையம் - ராக்கியாபாளையம் (வழி) அவிநாசி; அவிநாசி - சேயூர் வழித்தடங்கள்; கோவில்வழி - அலகுமலை; விஜயாபுரம் - காங்கயம். பல்லடம் ரோடு - கணபதிபாளையம் உள்ளிட்ட கிராமப்புற வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரக பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், பல்வேறு பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து அவசியமாக உள்ளது.பிரதான ரோடுகளை தவிர்த்து, கிராமப்புற வழித்தடங்களில்

பயணிகளின் கூட்டம் குறைவு என்பதால், சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காலை மற்றும் இரவு நேரங்களில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரையிலும், பகல் நேரங்களில் ஒன்றரை மணி நேரம் முதல் மூன்று மணி நேர இடைவெளியில் மட்டுமே டவுன் பஸ்கள் பல கிராமங்களுக்கு சென்று வருகின்றன. இவற்றில் பல பகுதிகளில், மினி பஸ் போக்குவரத்து இருப்பதில்லை.கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், 'டஞ்சனாக' இருப்பதால், மாதத்தில் சில நாட்கள் பழுது காரணமாக இயக்கப்படாத நிலை உள்ளது. அதற்கு பதிலாக மாற்று பஸ்கள், டிப்போவில் இருந்தால் மட்டுமே அப்பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இல்லையெனில், ஓரிரு நாட்களுக்கு அவ்வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம் தடைபடுகிறது.கிராமப்புற வழித்தட பஸ்களுக்கு, டிரைவர் மற்றும் கண்டக்டர் இல்லாமல் போவதும் அடிக்கடி தொடர்கிறது. திடீரென விடுமுறையில் செல்லும் டிரைவர் மற்றும் கண்டக்டரால், கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க ஆள் இருப்பதில்லை. அந்த பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகின்றன.பெரிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களை இயக்கும் டிரைவர் - கண்டக்டர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில், கிராமப்புற பஸ்களின் டிரைவர் - கண்டக்டர்களை பிரதான வழித்தடங்களுக்கு மாற்றுகின்றனர். டிக்கெட் வசூலுக்காக அதிகாரிகள் செய்யும் இத்தவறால், கிராமப்புற மக்கள் பஸ்சின்றி அவதிப்படுகின்றனர்.தொழில் மையமான திருப்பூருக்கு வியாபாரிகளும், விவசாயி களும், பொதுமக்களும் தினமும் வந்து செல்கின்றனர்; ஏழை மற்றும் நடுத்தர மக்கள், போக்குவரத்துக்கு பஸ்களையே நம்பியுள் ளனர். பஸ்கள் இயக்கப்படாத நாட் களில், பொதுமக்கள் பலவிதங்களிலும் பாதிப்படைகின்றனர்.கிராமப்புற வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும், பழுதால் பஸ்கள் தற்காலிகமாக நிறுத்துவதை தவிர்க்கவும், டிரைவர், கண்டக்டர் இல்லாமல், தாமதமான போக்குவரத்தை தவிர்க்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us