தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அத்தியாவசிய தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. உறுதி

அத்தியாவசிய தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. உறுதி

அத்தியாவசிய தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. உறுதி


ADDED : மே 28, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு காணப்படும்'' என, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலமுருகன் கூறினார்.

திருப்பூர், பார்க் வீதியில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்து வைத்த பின், எம்.எல்.ஏ. பாலமுருகன் கூறியதாவது:அலுவலகத்தில் தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை குறை, கோரிக்கைகளை பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்கலாம். தங்களின் குறைகளை எளிதாக என் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கில், விரைவில் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட உள்ளது.

தற்போது, தொகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளான சாலை வசதி, தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி ஆகியவை உடனுக்குடன் சரிசெய்து தரப்படும். ஈஸ்வரன் கோவில் பாலம் கட்டுமானப்பணி நிறைவுற்று, வரும் ஜூன் 20ம் தேதிக்குள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அரசு தலைமை மருத்துவமனை, மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அம்மா உணவகம் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறைகள் கேட்டறியப்பட்டுள்ளன.

பூ மார்கெட் கடைகளுக்கான வாடகை தொகை தொடர்பாக, வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணப்படும். அதே போல், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள கட்டடங்களை விரைந்து திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரின் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் குப்பை அகற்றும் பணி குறித்து அதிகாரிகள் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும். தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சுத்தம், சுகாதாரமாக வைக்க முன்னுரிமை வழங்கப்படும்.

நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்பட, 100 நிழற்குடைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அதே நேரம், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'தொடர் அப்டேட்' அவசியம் தொகுதிக்குள் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தாமாகவே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தன் திட்டங்களையும் செயல்பாடுகளையும் வெளிப்படையாக பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்ட எம்.எல்.ஏ-வின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.அதே வேளையில், பிரச்னைகளை தீர்ப்பதற்காக அவர் எடுக்கும் அடுத்தகட்ட முயற்சிகள் மற்றும் அதற்கு கிடைக்கும் தீர்வுகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களுக்குத் தெரியப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 'அப்டேட்' செய்வதன் வாயிலாக தான், மக்கள் நம்பிக்கை தக்க வைத்துக் கொள்ள முடியும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us