/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர் 'தங்கம்'
/
தேசிய சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர் 'தங்கம்'
தேசிய சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர் 'தங்கம்'
தேசிய சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர் 'தங்கம்'
ADDED : நவ 23, 2024 05:47 AM

திருப்பூர் : தேசிய சதுரங்க போட்டியில் பங்கேற்று அசத்திய, தமிழக அணியில் இடம் பெற்ற, திருப்பூர் மாணவர், 19 வயது பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், தேசிய சதுரங்க போட்டி நவ., 19 முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழக அணி சார்பில், 20 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
அவர்களில், ஒருவரான, திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல்கிருஷ்ணா, ஆறு போட்டிகளில், நான்கில் வெற்றியும், ஒன்றை 'டை'யும் செய்தார். புள்ளி பட்டியலில் தமிழக அணி முன்னேறியதால், முதலிடம் பிடித்து, தங்கம் பெற முடிந்தது. மாநிலத்துக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த, மாணவர் கோகுலகிருஷ்ணாவை, திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.