/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு தர வரிசையில் திருப்பூர் மாணவர் சாதனை
/
'நீட்' தேர்வு தர வரிசையில் திருப்பூர் மாணவர் சாதனை
'நீட்' தேர்வு தர வரிசையில் திருப்பூர் மாணவர் சாதனை
'நீட்' தேர்வு தர வரிசையில் திருப்பூர் மாணவர் சாதனை
ADDED : ஜூலை 25, 2025 10:14 PM

திருப்பூர்: 'நீட்' தேர்வு தர வரிசை பட்டியல், திருப்பூரை சேர்ந்த மாணவர் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார்.
திருப்பூர், கருவாரம்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள், சரவணன் - கவிதா. இருவரும் மருத்துவர்கள். இவரது மகன் ஹர்திக் விஜயராஜா, நீட் தேர்வு தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார். இவர், கோவையிலுள்ள சைதன்யா டெக்னோ பள்ளியில், பிளஸ் 2 முடித்து, நீட் தேர்வெழுதினார்.
ஹர்திக் விஜயராஜா கூறியதாவது: நீட் தேர்வு தர வரிசை பட்டியலில், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தது, மகிழ்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கு, தனியாக பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை. என் பள்ளியிலேயே சிறப்பான பயிற்சி எனக்கு கிடைத்தது.
ஆசிரியர்கள், மிகச்சிறப்பாக பாடங்களை நடத்தினர். தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஊக்கமளித்தனர். என் பெற்றோரும் மிகுந்த உற்சாகம், ஊக்குவிப்பு வழங்கினர். பெற்றோர் இருவரும் மருத்துவர்களாக இருப்பினும், என்னை மருத்துவம் தான் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை.
என் விருப்பம் போல தான் படித்தேன். தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு மன அழுத்தம் என்பது மிக அதிகளவில் இருக்கிறது. இருப்பினும், நேர்மறை எண்ணங்களுடன், நல்ல நினைவுகளை சுமந்து படிப்பில் கவனம் செலுத்தியதே இந்த வெற்றிக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.