/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய வளர்ச்சியை எதிர்நோக்கும் திருப்பூர்: தனித்திறமைகளை வெளிப்படுத்த ஆயத்தம்
/
புதிய வளர்ச்சியை எதிர்நோக்கும் திருப்பூர்: தனித்திறமைகளை வெளிப்படுத்த ஆயத்தம்
புதிய வளர்ச்சியை எதிர்நோக்கும் திருப்பூர்: தனித்திறமைகளை வெளிப்படுத்த ஆயத்தம்
புதிய வளர்ச்சியை எதிர்நோக்கும் திருப்பூர்: தனித்திறமைகளை வெளிப்படுத்த ஆயத்தம்
ADDED : நவ 02, 2024 11:10 PM
திருப்பூர்: பின்னலாடை தொழில்துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நிலைத்தன்மை கோரிக்கைகள் மற்றும் நுகர்வோர் விருப்பங்களை மாற்றுவதன் மூலம் புதிய வளர்ச்சியை திருப்பூர் எதிர்நோக்கியுள்ளது.
திருப்பூருக்கான நீடித்த நிலையான அங்கீகாரம் வேண்டுமெனில், தனி 'பிராண்ட்' ஆக உயர வேண்டும்; மற்ற பிராண்ட்டுகளுக்கான உற்பத்தியாளராக தொடரக்கூடாது. 'பிராண்ட்' என்ற அந்தஸ்தை பெற, நடைமுறை மாற்றங்களுக்கு, நிறுவனங்கள் மாறித்தான் ஆக வேண்டும். குறிப்பாக, மரபுசாரா எரிசக்தி பயன்பாடு அதிகரிக்க வேண்டும். மக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்; மக்காத பொருட்களை, மறுசுழற்சி முறையில் பயன்படுத்த திட்டமிட வேண்டும் என்பதே, சர்வதேச சந்தையின் தற்போதைய எதிர்பார்ப்பு.
திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், புதிய பசுமை சார் உற்பத்தி சட்டங்களை இயற்றியுள்ள நிலையில், திருப்பூருக்கு சர்வதேச அளவில் தனி அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பின்னலாடை உற்பத்தியில், புதிய மாற்றத்தை திருப்பூரில் செயல்படுத்தியுள்ளனர்; குறிப்பாக, '3டி' என்ற தொழில்நுட்பமும், 'ஏஐ' தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்படும், புதிய வகை இயந்திரங்களும், திருப்பூரின் டிஜிட்டல் மயமாயக்கலுக்கு பேருதவியாக இருக்கின்றன. உற்பத்தி திறனை மேம்படுத்துவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உற்பத்தி செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. ஒவ்வொரு பிரிவுகளிலும், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், உற்பத்தி செலவையும், கழிவுகள் உருவாகுவதையும் குறைக்கலாம் என, நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.