/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோடி பங்கேற்கும் பேரணி: திருப்பூர் பா.ஜ., ஆர்வம்
/
மோடி பங்கேற்கும் பேரணி: திருப்பூர் பா.ஜ., ஆர்வம்
ADDED : மார் 15, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணியில் பங்கேற்பது குறித்து திருப்பூர் பா.ஜ., வினர் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடி வரும், 18ம் தேதி கோவையில் நடைபெறவுள்ள பா.ஜ., பேரணி உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் உள்ள 19 மண்டல்களில் மண்டல் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் 18ம் தேதி, கோவையில், மோடி பங்கேற்கவுள்ள பா.ஜ., பேரணியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேருக்கு குறையாமல் சென்று பங்கேற்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

