/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது :பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
/
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது :பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது :பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது :பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
ADDED : ஜூலை 31, 2011 10:46 PM
திருப்பூர் : ''தி.மு.க., மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது; அந்த அளவுக்கு மரணகதி அடைந்து விட்டது,'' என்று எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.அ.தி.மு.க.. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:கொங்கு மண்டல மக்கள் நம்பிக்கையுடன் ஓட்டளித்ததால், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன. யாரும் எதிர்பார்க்காத வகையில், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி தொகுதிகள் மாநில அளவில் அதிக ஓட்டுக்களை பெற்றன. 'மக்களின் நம்பிக்கை வீணாகக்கூடாது' என்பதற்காக, முதல்வர் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக உழைத்தார். சுப்ரீம் கோர்ட் வரை சென்றும், சாயப்பிரச்னையில் தொழில் துறையினர் தோல்வி அடைந்திருந்தனர். விவசாயிகள் வேதனை கடலில் மூழ்கியிருந்தனர். யாருக்கும் பாதகம் ஏற்படாத வகையில், விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் தற்போது தீர்வு கண்டுள்ளார். தி.மு.க., கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், ஆடம்பரமாக 1,000 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு நடத்தியதிலும், கவிதை எழுதியதிலும் காட்டிய ஆர்வத்தை, தொழில் பிரச்னையில் காட்டவில்லை. திருப்பூர் பனியன் தொழில் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட நாள் கோரிக்கையை கேட்க நேரம் இல்லாததால், தி.மு.க., இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தமிழக வரலாற்றில் தி.மு.க., மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது; மக்கள் மன்றத்தை கூட, எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு மரண கதி அடைந்து விட்டது. சாயப்பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ள தமிழக முதல்வரை, திருப்பூர் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் தலை வணங்கி நன்றி செலுத்த வேண்டியது கடமை.
நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளதால், திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் நன்றிக்கடனை திருப்பி செலுத்துவர்.இவ்வாறு, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.