ADDED : ஆக 03, 2011 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வட்டார மற்றும் மாவட்டத்தலைவர் சிவராஜூ தலைமை வகித்தார். செயலாளர் சத்தியகுமார் வரவேற்றார். பொருளாளர் வரதராஜன் வரவு, செலவு அறிக்கை படித்தார். வட்டாரக்கல்விக்குழு பங்காருசாமி பேசினார். மாநிலப்பொருளாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் மாநிலத்தலைவர் சகாதேவன் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பேசினர். மாவட்ட செயலாளர் ஜோசப், மாவட்ட பொருளாளர் குப்புசாமி, வட்டார துணைச் செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.