sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி

/

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி


ADDED : ஆக 14, 2011 03:05 AM

Google News

ADDED : ஆக 14, 2011 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகள் பார்வைக்கு இடம்பெற்றன; 8 ம் வகுப்பு மாணவர்கள் எரிமலையை தத்ருபமாக அமைத்திருந்தனர்.

எரிமலை உருவாகும் விதம், வெடிக்கும் முறை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்; 7ம் வகுப்பு மாணவர்கள் வனவிலங்கு சரணாலயம் அமைத்துவிளக்கினர்.6ம் வகுப்பு மாணவர்கள் புவி வெப்பமயமாவதால் ஏற்படும் தீமைகளை கூறினர்; 5ம் வகுப்பு மாணவர்கள் மனித உடலில் இதயத்தின் பங்கு, இயக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 4ம் வகுப்பு மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் நன்மைகள், வானவில் உருவாதல்; காற்றாலையின் மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்தும் விளக்கினர். 3ம் வகுப்பு மாணவர்கள் வீடு, பள்ளி மாதிரிகளை அமைத்திருந்தனர்.முன்னதாக கண்காட்சியை தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, துவக்கி வைத்தார்; ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் மலர்செல்வி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us