/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கல்
/
மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கல்
ADDED : ஆக 14, 2011 03:08 AM
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெதப்பம்பட்டி, குடிமங்கலம், பூளவாடி
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச நோட்டுகள்
வழங்கும் நிகழ்ச்சி, பெதப்பம்பட்டி பள்ளியில் நடந்தது.
தலைமையாசிரியர்
ஆறுமுகம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சுந்தரசாமி முன்னிலை வகித்தார்.
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன்,
இலவச நோட்டுகள் வழங்கி பசுகையில், ''மாணவியரின் கல்வித்தரத்தை
மேம்படுத்துவதில், முதல்வர் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உடுமலை
தொகுதியில் போதிய பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து,
கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. பெதப்பம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில்
ஆய்வு நடத்தப்பட்டு, பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை
எடுக்கப்படும். பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான
வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகள், விரைவில் மேம்படுத்தப்படும்,''
என்றார். அ.தி.மு.க., உடுமலை தொகுதி செயலாளர் பாண்டியன், ஜெ., பேரவை
சிவராஜ், ஊராட்சி செயலாளர் அன்பர்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.