/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியின்றிவிநாயகர் சிலை: நால்வர் மீது வழக்கு
/
அனுமதியின்றிவிநாயகர் சிலை: நால்வர் மீது வழக்கு
ADDED : செப் 02, 2011 11:13 PM
திருப்பூர் : ஊத்துக்குளி பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்திக்காக, மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன; போலீசாரிடம் முறையான அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கப்பள்ளி விருமாண்டம்பாளையம், சக்தி நகர் பகுதியில் அனுமதியின்றி சிலை வைத்திருந்த ஒத்தபனைமேடு பகுதியை சேர்ந்த செல்வம் (42); குன்னத்தூர் நெட்டச்சிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (31). கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அனுமதியின்றி சிலை வைத்திருந்த, ஊத்துக்குளி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ரமேஷ் (24); கூலிபாளையம், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (23) ஆகியோர் மீது, போலீஸ் அனுமதியின்றி சிலை வைத்ததற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.