/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணை படகுத்துறைக்கு ரூ.3 லட்சத்தில் நுழைவுவாயில்
/
திருமூர்த்தி அணை படகுத்துறைக்கு ரூ.3 லட்சத்தில் நுழைவுவாயில்
திருமூர்த்தி அணை படகுத்துறைக்கு ரூ.3 லட்சத்தில் நுழைவுவாயில்
திருமூர்த்தி அணை படகுத்துறைக்கு ரூ.3 லட்சத்தில் நுழைவுவாயில்
ADDED : செப் 21, 2011 12:02 AM
உடுமலை : பொதுப்பணித்துறை சார்பில், திருமூர்த்தி அணை படகுத்துறை நுழைவு
வாயில் மற்றும் சுற்றுப்பகுதியில் 3 லட்சம் ரூபாய் செலவில் 'கேட்' மற்றும்
கான்கீரிட் பில்லர்கள் அமைக்கப்படுகிறது.
உடுமலை அருகேயுள்ள
திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அணையின் அழகை ரசிக்கும்
வகையில் படகுசவாரி மேற்கொள்கின்றனர். பலர் அணையில் குளிக்க ஆர்வம் காட்டி
வருகின்றனர். ஆங்காங்கே புதை குழிகள் இருப்பதால், அணையில் குளிக்க கூடாது
என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆர்வ கோளா
றில், சுற்றுலாப்பயணிகள் அணையில் குளிப்பதும், உயிரிழப்பு ஏற்படுவதும்
தொடர்கதையாகி வருகிறது. உயிரிழப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகள்
ஆலோசித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருமூர்த்தி அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு , படகுத்துறை முன்பு
கேட் மற்றும் கோவில் வளாகம் வரை அணைப்பகுதியில் தடுப்புகள் அமைக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, படகுத்துறை முன்பு கான்கீரிட் பில்லர்கள்
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில், கோவிலுக்கு வரும் வாகனங்களுக்காக
அவ்வப்போது அகற்றப்படுகின்றன. இந்நிலையில், படகுத்துறை முகப்பில் கேட்
அமைத்து பண்டிகை காலங்களில் மட்டும் பெரிய நுழைவு வாயில் வழியாக வாகனங்களை
விடவும்; மற்ற நாட்களில் அருகே அமைக்கப்படும் சின்ன கேட் வழியாக
சுற்றுலாப்பயணிகள் சென்று வர ஏதுவாக திட்டமிடப்பட்டது. தற்போது, கேட்
மற்றும் கான்கீரிட் பில்லர்கள் 3 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது,
என்றனர்.