/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்டர் மீடியன் கட்ட முடிவு :பெதப்பம்பட்டி மக்கள் கடும் எதிர்ப்பு

ADDED : செப் 21, 2011 12:03 AM
உடுமலை : உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், விபத்துகளை ஏற்படுத்தும் வகையில்
உயர் மின் கோபுர விளக்கு அமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல்
சென்டர்மீடியன் கட்டவும் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பொள்ளாச்சி-தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு பெதப்பம்பட்டி
நால்ரோடு பகுதியில் இணைகிறது. கல்வி நிறுவனங்கள், நூற்பாலைகள், காற்றாலை
நிறுவனங்கள் அதிகளவு உள்ள இப்பகுதிக்கு பொள்ளாச்சி மற்றும்
உடுமலையிலிருந்து 15க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நிறுத்தப்படுகிறது. நால்ரோடு
பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக மற்றும்
நிரந்தர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பஸ்கள் அனைத்தும் தாராபுரம்
ரோட்டின் மத்தியில் நிறுத்தப்படும் அவலம் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக
நால்ரோட்டில் சென்டர்மீடியன் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் நால்ரோட்டில்
உயர் மின் கோபுர விளக்கு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர்மீடியன் கட்டும் பணிகளை துவக்கினர். உடுமலை
ரோட்டில் குறுகலான இடத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க அஸ்திவாரம்
தோண்டப்பட்டுள்ளது. இப்பணிகளால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு புகார்
மனுஅனுப்பியுள்ள னர்.