UPDATED : மே 02, 2026 07:06 PM
ADDED : மே 02, 2026 07:01 PM
ஆன்மிகம்
திருக்கல்யாண வைபவ விழா
ஸ்ரீ பத்ராவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண வைபவ பெருவிழா, திருப்பூர் சேவா சமிதி, வஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகர பத்மசாலியர் சமூகத்தினர். கொங்கணகிரி முருகன் கோவிலில் இருந்து சீர்வரிசை ஊர்வலம் - காலை 8:30 மணி. திருக்கல்யாணம் - காலை 9:00 மணி.
தேர்த்திருவிழா
அவிநாசிலிங்கேஸ்வர் கோவில், அவிநாசி. ஸ்ரீநடராஜ பெருமானின் பிரம்மதாண்டவ தரிசன காட்சி, - காலை 10:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. நிகழ்த்துபவர்: 'அப்பரடிப்பொடி' சொக்கலிங்கம். மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொங்கல் விழா
30ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா, காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். மகா அபிேஷகம், பிரசாதம் வழங்குதல் - காலை 10:00 மணி.
* மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். சடையப்பன் கோவிலில் இருந்து பால்குடம் கொண்டு வருதல் - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி.
* ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். பால்குட ஊர்வலம் - மாலை 4:00 மணி.
* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். திருவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி. ஸ்ரீ குகாம்பிகை அலங்காரம் - மாலை 5:00 மணி. அம்மன் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் - இரவு 7:30 மணி.
ஈஸ்வரம்மா தினம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், ராம் நகர் வித்யா மந்திர், பி.என். ரோடு, திருப்பூர். கலைநிகழ்ச்சிகள் - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
நகைச்சுவை நிகழ்ச்சி
'சிரிப்போம் சிந்திப்போம்' எனும் தலைப்பில் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம். 'மனதோடு உறவாடு' எனும் தலைப்பில், சென்னை, உலக தமிழராய்ச்சி நிறுவன ஆய்வாளர் மாலதி. 'சிரிப்போடு விளையாடு' எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன். மாலை 5:00 மணி.
கண் சிகிச்சை முகாம்
இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாயி சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை. காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ரத்ததான முகாம்
ஸ்ரீ சரண் மருத்துவமனை, போயம்பாளையம் பிரிவு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
தொடர் கருத்தரங்கம்
கடவுள் வாழ்த்து எனும் தலைப்பில் திருக்குறள் தொடர் கருத்தரங்கம், ராம் வணிக மையம், என்.ஜி.ஆர். ரோடு, பல்லடம். ஏற்பாடு: பல்லடம் தமிழ்ச்சங்கம். மாலை 4:00 மணி.
இலவச அறிமுக பயிற்சி
மனவளக்கலை யோகா, இலவச அறிமுக பயிற்சி, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஜோதிபுரம், ஆலங்காடு, கருவம்பாளையம். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பண்பு பயிற்சி
'துள்ளி துள்ளி' எனும் தலைப்பில், பெண் குழந்தைகளுக்கான கோடை கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை 10:00 மணி.
விளையாட்டு
தேசிய சதுரங்க போட்டி
ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், கண்ணபிரான் காலனி, வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட செஸ் அசோசியேஷன், கே.பி.கே. செஸ் அகாடமி. காலை 10:00 மணி.
