/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பொங்கல் திருவிழா அமைப்பினர் ஆலோசனை
/
திருப்பூர் பொங்கல் திருவிழா அமைப்பினர் ஆலோசனை
ADDED : ஜன 04, 2024 12:31 AM

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில், பொங்கல் திருவிழா வரும் 15 முதல் 17 வரை மூன்று நாட்கள், நொய்யல் நதிக்கரையில் நடத்தப்படுகிறது.
இவ்விழா ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் விழாக்குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள் மோகன் கார்த்திக், முத்துராமலிங்கம், நடராஜன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடு குறித்து விளக்கினர்.
விழாவை முன்னிட்டு, 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் மற்றும் குழுவின் பொறுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அழைப்பிதழ் வினியோகித்தல், கலை நிகழ்ச்சிகளுக்கும், விழா ஏற்பாடுகளுக்கும் நன்கொடை திரட்டுதல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.