/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கராத்தேவில் அசத்திய திருப்பூர் மாணவர்கள்
/
கராத்தேவில் அசத்திய திருப்பூர் மாணவர்கள்
ADDED : அக் 02, 2024 06:38 AM

திருப்பூர் : இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஒய்.,) சார்பில், தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி, சிவகங்கை மாவட்டம், ராஜராஜன் கல்லுாரியில் நடந்தது.
இதில், திருப்பூர் வி-கராத்தே அகாடமி மாணவி சஸ்மிதா (புது ராமகிருஷ்ணாபுரம் அரசு பள்ளி) 56 கிலோ எடை பிரிவில், வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவி என்ற சாதனையை தக்க வைத்தார்.
மும்பை கதீட்ரல் ஜான் கோனான் பள்ளியில் சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில், வி-கராத்தே அகாடமி மாணவன் அபினவ் (விருக்ஷா இன்டர்நேஷனல் பள்ளி) பங்கேற்று, தங்க பதக்கம் வென்றார். இவர். டிச., மாதம் பஞ்சாபில் நடக்கவுள்ள தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார்.சாதித்த மாணவர்களை புது ராமகிருஷ்ணாபுரம் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, விருக்ஷா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், வி-கராத்தே அகாடமி நிறுவனர் டாக்டர் விஸ்வநாத் உட்பட பலரும் வாழ்த்தினர்.