/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பெண்கள் கபடி அணி சாதனை மாநில போட்டியில் மூன்றாமிடம்!
/
திருப்பூர் பெண்கள் கபடி அணி சாதனை மாநில போட்டியில் மூன்றாமிடம்!
திருப்பூர் பெண்கள் கபடி அணி சாதனை மாநில போட்டியில் மூன்றாமிடம்!
திருப்பூர் பெண்கள் கபடி அணி சாதனை மாநில போட்டியில் மூன்றாமிடம்!
ADDED : நவ 13, 2024 04:21 AM

திருப்பூர் : தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், கடந்த, 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை, மாநில ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, திருவண்ணாமலையில் நடந்தது.
இதில், தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். அரையிறுதி ஆட்டத்தில் திருப்பூர் மாவட்ட அணியும், ஈரோடு மாவட்ட அணியும் மோதின. இதில், திருப்பூர் மாவட்ட அணி வெற்றி வாய்ப்பை இழந்து, மூன்றாமிடம் பிடித்தது.
'திருப்பூர் மாவட்ட அணி, மாநில போட்டிகளில் முதன் முறையாக மூன்றாமிடம் பெறுவது, திருப்பூர் மாவட்ட கபடி வரலாற்றில் இதுவே முதல் முறை,' என்கின்றனர் கபடி கழகத்தினர். அணி கேப்டன் கதீஜா பீவி, பயிற்சியாளராக செந்தில், அணி மேலாளராக வாசு ஆகியோர் செயல்பட்டனர்.மாநில போட்டியில் மூன்றாமிடம் பெற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர் மற்றும் அணி மேலாளர்களுக்கான பாராட்டு விழா, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அணி வீராங்கனைகள், பயிற்சியாளர், அணி மேலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு, சான்றிதழ் மற்றும் தலா, 5,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அத்துடன், மூன்றாமிடத்துக்கான பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம், திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராமதாஸ், முத்து கிருஷ்ணன், புரவலர் மகாலட்சுமி ரத்தினசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், கவுரவ உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நடுவர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.