தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலைப்பு சிறந்த படைப்பு: கல்லுாரி மாணவர் ஆர்வம்

தலைப்பு சிறந்த படைப்பு: கல்லுாரி மாணவர் ஆர்வம்

தலைப்பு சிறந்த படைப்பு: கல்லுாரி மாணவர் ஆர்வம்


UPDATED : ஜூலை 09, 2026 06:19 PM

ADDED : ஜூலை 09, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 06:19 PM ADDED : ஜூலை 09, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் 'நிப்ட்--டீ' பின்னலாடை, ஆடை வடிவமைப்பு கல்லூரி, ஆடை வடிவமைப்புத் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள், 'இல்யூஷன் - உலக கோப்பை கால்பந்து திருவிழா கொண்டாட்டம் -2026' என்ற தலைப்பில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கொண்டாடும் வகையில், தனித்துவமான படைப்புக் கண்காட்சியை நடத்தினர்.

'கற்பனை, உணர்வும், கற்பனையும் சந்திக்கும் இடத்தில் ஒரு தலைசிறந்த படைப்பு உருவாகிறது,' என்ற கருத்தை மையமாகக் கொண்டு, முதலாம் ஆண்டு பயிலும், 55 மாணவர்கள் இணைந்து இந்தப் படைப்புக் கண்காட்சியை உருவாக்கியுள்ளனர். ஒளியியல் மாயத்தோற்றம் என்ற கலைநுட்பத்தின் வாயிலாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள், கால்பந்தாட்டத்தின் வீர உணர்வு, குழு ஒற்றுமை, அர்ப்பணிப்பு, வெற்றிக்கான போராட்டம் மற்றும் உலக மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்நிகழ்ச்சி, கல்லூரி டீன் சம்பத், முதல்வர் ராதாமணி, மற்றும் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவர் ஜெயந்தி ஆகியோரின் முன்னிலையில் நடந்தது. கால்பந்து உலகக் கோப்பையின் உற்சாகத்தை கொண்டாடும் வகையில், முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக, மாணவ, மாணவியர் கருத்து கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us