/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டிட்டோஜாக்' உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
'டிட்டோஜாக்' உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜன 28, 2024 12:03 AM

திருப்பூர்:தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
தொடக்ககல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும், அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். பேச்சுவார்த்தையின், 12 கோரிக்கை தொடர்பான ஆணைகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரதத்தை, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் கனகராஜ் துவக்கி வைத்தார்.
தமிழக ஆசிரியர் கூட்டணி பாலசுப்பிரமணியம், தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபிறகு, உண்ணாவிரதம் நிறைவு பெற்றது. போராட்டத்தை, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுசெயலாளர் ராஜேந்திரன் முடித்து வைத்தார். திரளான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

