ADDED : டிச 01, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் நகர வட்டார த.மா.கா., சார்பில், 11வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பல்லடம் நகரத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அன்சாரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகரப் பொருளாளர் பொன்னையன், துணைத் தலைவர் ராஜசேகர், பொதுச் செயலாளர் ராமசாமி, இளைஞரணி செயலாளர் உத்தேஷ் பங்கேற்றனர்.