ADDED : ஏப் 17, 2026 09:41 PM
பல்லடம்:பல்லடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ. - பா.ம.க. - உ.உ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்றனர். ஆனால், கூட்டணியில் உள்ள த.மா.கா., நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்கவில்லை.
த.மா.கா., நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, 'பழனிசாமி பங்கேற்ற கூட்ட மைதானத்தில், த.மா.கா.,வை தவிர்த்து அனைத்து கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் இருந்தன. முன்னதாக, கூட்டம் குறித்த தகவல் கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதேபோல், த.மா.கா., கொடி இல்லாதது குறித்து கேட்டதற்கும் சரியான பதில் இல்லை. போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல், த.மா.கா.,வை தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் இருந்ததால், கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை.
தலைமை அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கூட்டணியில் நாங்களும் உள்ளோம் என்பதை உணர்ந்து அ.தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும்,' என்றனர்.
