/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருஅரங்கன் சுவாமிகளுக்கு இன்று ஜலதாதிவாஸம்
/
திருஅரங்கன் சுவாமிகளுக்கு இன்று ஜலதாதிவாஸம்
ADDED : நவ 06, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; குறிஞ்சேரி ஆண்டள் நாச்சியார் கோவிலில், திருஅரங்கன் நுாதன சிலை ஜலதாதிவாஸம் இன்று நடக்கிறது.
உடுமலை அருகே குறிஞ்சேரியில், பூமிலட்சுமி அம்பாள், ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார்கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று (7ம் தேதி) மதியம், 1:00 மணிக்கு திருஅரங்கன் சுவாமிகளின் நுாதன சிலைஸ்தாபிக்கப்பட்டு, அதிவாஸம் என்ற ஜலதாதிவாஸம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தி இன்னிசை பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.