இன்று இனிதாக
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. சூரிய சந்திர மண்ட காட்சி - மாலை 9:00 மணி. 'மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்பது திருமணத்துக்கு முன்னரா... பின்னரால' எனும் தலைப்பில், 'கோவை சிவசக்தி சொல்லரங்கம்' நடத்தும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் - மாலை 6:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். ஸ்ரீ விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி பூஜை, தீபாராதனை, முளைப்பாலிகை ஊர்வலம் - காலை 8:00 மணி. திருக்குடங்களில் திருவருட்சக்தி ஏற்றல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமபட்டிணம், சிவன்மலை, காங்கயம். சிவன்மலை ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. வாஸ்து சாந்தி பூஜை - இரவு 8:00 மணி.
பொங்கல் திருவிழா
ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 8:00 மணி. அபிேஷகம் - காலை 11:00 மணி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. சாட்டு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி. பெண்கள் கும்மியாட்டம் - இரவு 8:00 மணி.
n பொது n
வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம், 1:30 மணி வரை.
சிறப்புக்கூட்டம்
உலக தாய்மொழி தின சிறப்புக்கூட்டம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கல்லுாரி தமிழ்த்துறை, கலை இலக்கிய பெருமன்றம். காலை 10:00 மணி.
உணவுத்திருவிழா
மாநகராட்சி துவக்கப்பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கலந்தாய்வு கூட்டம்
சங்க கலந்தாய்வு கூட்டம், விஸ்வாஸ் ஓட்டல், எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் அசோசியேஷன். மாலை 5:00 மணி.
மகளிர் தின விழா
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி, கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
n அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் காந்திநகர். காலை 10:30 மணி.
n கலெக்டர் அலுவலத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பணியாளருக்கான' மிஸ் கலெக்ட்டரேட்', லக்கிகார்னர், பாட்டுக்கு பாட்டு, லெமன்ஸ்பூன், கோலப்போட்டி, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சமூக நலத்துறை. காலை 10:00 மணி.
ஆண்டு விழா
பள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாஸ்கோ நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.
திறப்பு விழா
நீர் மோர் பந்தல் திறப்பு விழா, ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர். ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., காலை 9:00 மணி.
இலவச காது பரிசோதனை முகாம்
செவித்திறன் தினத்தை முன்னிட்டு, இலவச காது பரிசோதனை முகாம், மெட்ெஹல்ப் ஹியரிங் எய்ட் சென்டர், கீதா பார்மசி அருகில், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
பிறந்த நாள் விழா
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., பச்சாபாளையம், வடுகபாளையம், பல்லடம். மாலை 6:00 மணி.
சிறப்பு விற்பனை
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10;00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.