ADDED : டிச 03, 2024 07:13 AM
n ஆன்மிகம் n
சிறப்பு பூஜை
ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு ேஹாமம், அபிேஷகம் - அதிகாலை 5:00 மணி. மகா தீபாராதனை - காலை 7:30 மணி.
மண்டல பூஜை விழா
65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'சபரி மோக்ஷம்' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை 6:45 - இரவு 9:00 மணி வரை.
n பொது n
அவசர ஆலோசனை கூட்டம்
சொத்துவரி உயர்வு, வாடகை கட்டட சி.எஸ்.டி., வரி வதிப்பு தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம், ரமணாஸ் ஓட்டல், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அனைத்து தொழில் அமைப்புகள். மாலை 4:00 மணி.
உண்ணாவிரத போராட்டம்
உயர்த்தப்பட்ட சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை 08:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஆர்ப்பாட்டம்
சேமலைக்கவுண்டம்பாளையத்தில், மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சுங்கம் பகுதி, அவிநாசிபாளையம், பொங்கலுார். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.