ADDED : டிச 04, 2024 10:52 PM
n ஆன்மிகம் n
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'சுந்தர காண்டம்' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை 6:45 - இரவு 9:00 மணி வரை.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில், என்.ஜி.ஆர்., ரோடு, பல்லடம். காலை 9:15 முதல், 10:15 மணி வரை. திருப்பள்ளி எழுச்சி, திரவிய வேள்ளி, சிறப்புபூஜை, நாடி சந்தானம் - அதிகாலை 5:00 மணி. மகா அபிேஷகம், அலங்கார பூஜை, பத்துவித தரிசனம், மகா கும்பாபிேஷகம் - காலை 9:15 முதல், 10:15 மணி வரை. அன்னதானம் - 10:30 மணி.
n பொது n
திறப்பு விழா
அஷ்வின் சி.ஏ., அகாடமி திறப்பு விழா, ஜே.பி., டவர் முதல் மாடி, பின்னி காம்பவுண்ட் மெயின் வீதி, பார்க் கேட் எதிரில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:30 முதல், 11:30 மணி வரை.
பயிற்சி முகாம்
கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
குறைகேட்பு முகாம்
வரிவிதிப்பு குறை கேட்பு முகாம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
சலுகை விற்பனை
'டைல்ஸ் அண்ட் சானிட்டரிவேர்' சிறப்பு சலுகை விற்பனை, கைலாஷ் டிரேடர்ஸ், பாரதி நகர், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.