ADDED : டிச 07, 2024 06:36 AM
n ஆன்மிகம் n
சிறப்பு பூஜை
ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. அனுப்பர்பாளையம் முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி பஜனை குழு இணைந்து வழங்கும் சிறப்பு பூஜை - மாலை 6:30 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மாரியம்மன் கோவில், பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், கம்பம் நடுதல் - இரவு 8:00 மணி.
மண்டல பூஜை விழா
65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'ஸ்ரீ ராம பட்டாபிேஷகம்' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு நிறைவு விழா - மாலை 6:45 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில், என்.ஜி.ஆர்., ரோடு, பல்லடம். காலை 6:30 மணி.
n பொது n
இசை அமுதம்
பதினெட்டாவது ஆண்டு 'இசை அமுதம் 2024' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஷண்முகானந்த சங்கீதா சபா. சென்னை கோமல் தியேட்டர் வழங்கும் திரவுபதி மேடை நாடகம் - மாலை 6:30 மணி.
ஆலோசனை கூட்டம்
சொத்து வரி உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஆலாசனை கூட்டம், வியாபாரிகள் சங்க அலுவலகம், அரிசிக்கடை வீதி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அனைத்து தொழில் அமைப்பு. காலை 11:00 மணி.
கண்காட்சி விற்பனை
'ஸ்மைலி எக்ஸ்போ' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா, லட்சுமி திருமண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவன்ட்ஸ் நிறுவனம். காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை.
சலுகை விற்பனை
'டைல்ஸ் அண்ட் சானிட்டரிவேர்' சிறப்பு சலுகை விற்பனை, கைலாஷ் டிரேடர்ஸ், பாரதி நகர், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.