ADDED : பிப் 02, 2025 01:03 AM
n ஆன்மிகம் n
தைப்பூச தேர்த்திருவிழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம் - மாலை 6:00 மணி.
n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. கணபதி ேஹாமம் - காலை 4:30 மணி. கிராம சாந்தி - இரவு 9:00 மணி.
n வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. கணபதி ேஹாமம் - காலை 8:30 மணி. கிராம சாந்தி - இரவு 8:00 மணி.
தேர்த்திருவிழா
வலுப்பூரம்மன் கோவில், அலகுமலை, திருப்பூர். காப்பு கட்டுதல், கொடியேற்றம், மகா அபிேஷகம், அம்மன் புறப்பாடு - காலை 7:00 மணி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, அம்மன் திருவீதி உலா, பிரசாரம் வழங்குதல் - இரவு 7:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். 2ம் கால யாக பூஜை, எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாகுதி - காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. 3ம் கால யாக பூஜை துவக்கம், பூர்ணாகுதி, மாலை 5:00 மணி.
n ஆண்டியம்மன், கருப்பராய சுவாமி கோவில், கூட்டப்பள்ளி, அவிநாசி. கும்பாபிேஷகம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் - காலை 10:00 மணி. அன்னதானம் - காலை, 10:00 மணி முதல்.
n கற்பக விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பெருமாள் கோவில், குமர கவுண்டன்புதுார், வடுகபாளையம், அவிநாசி. மகா கும்பாபிேஷகம், தசதானம், தசதரிசனம், மஹாபிேஷகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 9:00 முதல் 10:15 மணி வரை.
n காமாட்சி அம்மன் கோவில், பொங்கலுார். விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை - காலை 8:30 மணி. கோபுர கலசம் வைத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 10:00 மணி. லலிதா திரிசதி குங்கும அர்ச்சனை, திரவியாகுதி - மாலை 5:00 மணி. யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 9:00 மணி.
n செல்வபெருமாள், குபேரலிங்கேஸ்வரர் கோவில், சுகுமார் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ சாந்த மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாலிகை ஊர்வலம் - மாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 6:00 மணி.
ஆண்டு விழா
18ம் ஆண்டு துவக்க விழா, ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் கோவில், ஸ்ரீ கிருஷ்ணா நகர், ஜான்ஜோதி கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம் - அதிகாலை 5:30 மணி. 108 சங்காபி ேஷகம், கலசாபிேஷகம் - 6:30 முதல் 7:30 மணி வரை. அலங்கார பூஜை, மகா தீபாராதனை - 7:30 மணி. அன்னதானம் - 9:00 மணி.
n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், புதுராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். கணபதி ேஹாமம் - காலை 8:00 மணி. அபிேஷக பூஜை - 9:00 மணி. அலங்கார பூஜை - 11:30 மணி.
பணி துவக்க விழா
புதிய மரத்தேர் பணிகளுக்கான இரண்டாம் நிலை துவக்க விழா, விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார். ஏற்பாடு: ஹிந்து அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் குழுவினர், ராகம் எக்ஸ்போர்ட் வளாகம். காலை 10:00 மணி.
மண்டலாபிேஷக பூஜை
ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், சீரங்க கவுண்டன்பாளையம், இடுவாய். மதியம் 12:00 மணி.
n சக்தி விநாயகர், சேற்று மாரியம்மன், காசிலிங்கம்பாளையம், பாப்பாங்குளம், அவிநாசி. காலை 7:00 மணி.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
கண் சிகிச்சை முகாம்
இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
புத்தகத் திருவிழா
21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை. வெற்றி தமிழர் பேரவை, திருப்பூர் நகைச்சுவை மன்றம் கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி. 'இலக்கியங்களில் நாம் கற்பது இன்புற்று மகிழவே, பின்பற்றி வாழவே' எனும் தலைப்பில் பட்டிமன்றம். பங்கேற்பு: பேராசிரியர் ஞானசம்பந்தன் - இரவு 7:00 மணி.
n 'தினமலர்' தாமரை பிரதர்ஸ் அரங்கு, ஸ்டால் எண், 16, நுாற்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அணிவகுப்பு.