ADDED : மே 24, 2025 11:14 PM
n ஆன்மிகம் n
நிகும்பலா மஹா யாகம்
பிரித்தியங்கிரா தேவி நிகும்பலா மஹா யாகம், பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமி, ஸ்ரீ ஜெய்சக்தி ஞான விநாயகர் கோவில், வலசுப்பாளையம், பொங்கலுார். மூத்தோர் ஆதரவு சரணாலயம் துவக்க விழா - மாலை 3:40 மணி. உலக நலன் வேண்டி பிரித்தியங்கிரா தேவி நிகும்பலா மஹாயாகம், - மாலை 4:00 மணி.
திருக்கல்யாண மஹோத்ஸவம்
ஸ்ரீஸ்ரீ கோமடம் ஸ்வாமி களின் திருநட்சத்திர உத்ஸவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண ம ேஹாத்ஸவம், நாச்சம்மாள் திருமண மண்டபம், ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம். இரண்டாம் கால ஹோமம், மகா பூர்ணாகுதி - காலை 7:00 மணி. மிதுன லக்னத்தில் திருமாங்கல்ய தாரணம் - காலை 9:00 மணி. ஆசார்யருக்கு பாத பூஜை - காலை 10:30 மணி. ததீயாராதனம் - மதியம் 1:00 மணி. கோமடம் ஸ்ரீ ஸ்வாமியின் உபந்யாஸம் - மாலை 4:00 மணி. ஸங்கீர்த்தனம் - மாலை 6:00 மணி.
ஸ்ரீ ஸீதா கல்யாண மஹோத்ஸவம்
ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடம், காவேரி வீதி, ஓடக்காடு, திருப்பூர். உஞ்சவிருத்தி - காலை 8:00 மணி. ஸ்ரீ வசந்த மாதவ பூஜை - 9:00 மணி. கொட்னோத்ஸவம் - 9:30 மணி. ஸ்ரீ ஸீதா கல்யாண ம ேஹாத்ஸவம் - மதியம் 12:00 மணி. வசந்த மாதவ வீதி பூஜை - மாலை 5:00 மணி. திவ்ய நாமபஜனை, வசந்த கேளிக்கை, பல்வளிம்பு - இரவு 7:00 மணி. ஸ்ரீ கோணங்கிதாஸர் ஸேவை, ஸ்ரீ ஆஞ்சநேய உத்ஸவம், மகா தீபாராதனை - இரவு 10:00 மணி.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.
n காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
சிறப்பு சொற்பொழிவு
அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். 'ஆன்மீகமும் அறிவியலும்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
சிறப்பு விற்பனை
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
'நிட்ஜோன் - 2025'
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் கண்காட்சி, வேலன் ஓட்டல் கண்காட்சி அரங்கம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நிட்ஜோன் எக்ஸ்போ நிறுவனம். காலை 10:00 மணி.
காது பரிசோதனை இலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n
கூடைப்பந்து அணித்தேர்வு
மாவட்ட ஜூனியர் பெண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன். மாலை 4:00 மணி.