sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : நவ 01, 2025 11:26 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம்  கும்பாபிஷேக விழா ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ திரிசூலி அம்மன் கோவில், ராமச்சியம்பாளையம், மாதப்பூர், சூலுார். இரண்டாம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி - காலை 9:00 மணி. பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - 10:30 மணி. கண் திறத்தல், சயாணதிவாசம் - மாலை 5:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை - மாலை 6:00 மணி. காவடியாட்டம் - இரவு 8:00 மணி.

 ஸ்ரீவிநாயகர், ஏரிக்கருப்பராயர், கன்னிமார், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரைவீரன் கோவில், அசநல்லிபாளையம், வேட்டுவபாளையம், அவிநாசி. இரண்டாம் கால வேள்வி பூஜை - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:30 மணி. பேரொளி வழிபாடு, திருக்குடங்கள் புறப்படுதல் - காலை 8:00 மணி. மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு - 8:45 மணி. பெருந்திருமஞ்சனம் - 11:00 மணி. காராளன் கலைக்குழு கம்பத்து ஆட்டம் - இரவு 7:00 மணி.

 திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலகண்டபுரம், திருப்பூர். விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை - காலை 8:30 மணி. புதிய ராஜகோபுரத்துக்கு கலசம் வைத்தல் - 10:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 5:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பெரிய தேர் நிலையம் அருகில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிபொடி சொக்கலிங்கம் ஐயா. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை.

 பொது  பயிற்சி வகுப்பு 'பாரதப் பண்பாடு' எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு, ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம், சன்னதி வீதி, திருமுருகன்பூண்டி. காலை, 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - அதிகாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் காலை - 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

பாராட்டு விழா 2025ம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதாளர்களுக்கு பாராட்டு விழா, திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பதியம் இலக்கிய அமைப்பு. காலை 10:00 மணி.

 மருத்துவம்  இருதய பரிசோதனை இலவச கண் சிகிச்சை, அக்கு பஞ்சர், இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம், லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர். ஏற்பாடு: சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் அறக்கட்டளை, லயன்ஸ் மைக்ரோ லேப். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண் சிகிச்சை முகாம் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ரத்ததான முகாம் ஸ்ரீ சரண் மருத்துவ மனை, போயம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

காது திறன் சோதனை இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

 விளையாட்டு  மாரத்தான் போட்டி முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு மாரத்தான் போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை 6:00 மணி.

கபடி போட்டி சிறுவர்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி, மாவட்ட கபடி அலுவலக மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம். காலை 10:00 மணி முதல்.

சதுரங்க போட்டி பிரக்ருதி பப்ளிக் பள்ளி, பஞ்சப்பட்டி, பொள்ளாச்சி மெயின் ரோடு, தாராபுரம். ஏற்பாடு: தாராபுரம் தாலுகா சதுரங்க கழகம், காலை 10:00 மணி.

பயிற்சி முகாம் தேசிய அளவிலான டேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாம், புத்தாக்க பயிற்சி, ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசி. ஏற்பாடு: டேக்வாண்டோ சங்கம், தமிழ்நாடு. காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us