தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : ஜன 09, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n மார்கழி அருள் மழை 'திருமந்திர சிந்தனை' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. சிறப்பு வழிபாடு - மாலை 4:30 மணி. பள்ளி மாணவ, மாணவியர் திருமுறை பாடல் இன்னிசை - மாலை 4:45 மணி. 'யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: அருணை பாலறாவாயன் - மாலை 5:45 மணி.

பொங்கல் விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கருவம்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி.

மார்கழி பாராயணம் திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.

மார்கழி உற்சவம் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்திநகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

மார்கழி கலை விழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். இசைநிகழ்ச்சி, பரத நாட்டியம் - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாண ராமன். மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

n பொது n மதிப்பீட்டு முகாம் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம். ஏற்பாடு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

கணித திறனறிவு போட்டி 34வது கொங்கு டிராபி மாவட்ட அளவிலான கணித திறனறிவு போட்டி, கொங்கு மெட்ரிக் பள்ளி, ஊத்துக்குளி. மதியம், 2:00 மணி.

பென்சனர் தின விழா குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு. காலை 9:30 மணி.

வேலைவாய்ப்பு முகாம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண்: 439, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

ஆண்டு விழா 32ம் ஆண்டு விழா, அவிநாசி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, எம்.நாதம்பாளையம், அவிநாசி. மாலை 4:00 மணி.

உலக அமைதி வார விழா மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆண்டவர் காலனி தவமையம், அவிநாசி. மனமிருந்தால் மார்க்கமுண்டு எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

சிறப்பு கருத்தரங்கம் 'உங்கள் எதிர்காலம் இங்கிருந்து தொடங்குகிறது ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்; செழித்து வளருங்கள்' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், வெள்ளி விழா அரங்கம், செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. காலை 9:30 மணி.

விழிப்புணர்வு நிகழ்ச்சி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு வட்டார போக்குவரத்து துறை. மதியம் 12:00 மணி.

பா.ஜ. பொதுக்கூட்டம் பாண்டியன்நகர், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட பா.ஜ. பங்கேற்பு: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மாலை 5:30 மணி.

சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

சிறப்பு வகுப்பு 'திருக்குறள் திருப்பணி' எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு, ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர், காங்கயம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

புத்தக கண்காட்சி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

வினாடி - வினா போட்டி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி - வினா போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி.

n விளையாட்டு n கிரிக்கெட் திருவிழா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா, கிவிஸ் மைதானம், சுண்டக்காம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஒருங்கிணைந்த அவிநாசி ஒன்றிய, நகர தி.மு.க. காலை 9:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us