ADDED : ஏப் 07, 2025 05:53 AM
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு - மதியம் 12:00 மணி. பட்டினி அபிேஷகம், ரிஷப வாகன காட்சி - இரவு 8:00 மணி.
குண்டம் திருவிழா
கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அலங்காரம் - காலை 8:00 மணி. குண்டம் திறப்பு பூ போடுதல் - காலை 11:00 மணி.
l கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார் புதுார், சிங்கனுார், கணபதிபாளையம், பல்லடம். குண்டம் திறப்பு பூ போடுதல் - மதியம் 1:00 மணி. பூவோடு எடுத்தல் - மாலை 5:00 மணி. வேல் கழுவுதல் - இரவு 7:00 மணி. படைக்கலம் - இரவு 11:00 மணி.
பொங்கல் விழா
சித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ தன்னாசியப்பன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மகா முனியப்பன், ஸ்ரீ ஏமக்கருப்பன், ஸ்ரீ வேட்டைக்காரர், ஸ்ரீ மாயவப் பெருமாள், மேட்டுக்காடு, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. கணபதி ேஹாமம் - காலை 6:00 மணி. அம்மை அழைத்தல் - இரவு 10:00 மணி.
l 37ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். முதல் கால பூஜை - காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. இரண்டாம் கால ஸ்ரீ காமாட்சி அலங்கார பூஜை - இரவு 7:00 மணி.
l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமி நகர் நான்காவது வீதி, திருப்பூர். விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கும்பம் அழைத்து வருதல் - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில், தொரவலுார், பெருமாநல்லுார். சுவாமி கண் திறப்பு, கோவில் புகுதல் - இரவு 8:00 மணி.
l 43ம் ஆண்டு பொங்கல் விழா, விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், மடத்துப்பாளையம் பிரிவு, அவிநாசி. பூவோடு எடுத்தல் - காலை 5:00 மணி. அபிேஷகம் - இரவு 8:00 மணி.
l மங்கள விநாயகர், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரிய கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்து ஆடுதல் - காலை 6:30 மணி. அம்மனுக்கு அபிேஷகம் - இரவு 7:00 மணி. சிறப்பு அலங்காரம், கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 மணி.
l ஸ்ரீ மாரியம்மன் கோவில், செம்பியநல்லுார், வெள்ளியம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்தல், அபிேஷகம் - காலை 6:30 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 மணி.
l போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். சக்தி கரகம் அழைத்து வருதல், படைக்கலம் - இரவு 8:00 மணி. மீனாட்சி கல்யாணம் - மாலை 5:00 மணி.
l 29ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. படைக்கலம் எடுத்து வருதல், அம்மன் கரகம் எடுத்தல் - இரவு 8:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பயிலரங்கம்
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிலரங்கம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஸ்டார்ட் அப் இந்தியா வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ். காலை 10:30 மணி.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலவச தியான பயிற்சி, ஆரோக்கியம், வளமான வாழ்க்கை, சுயமேம்பாட்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, டி.ஆர்.ஜி., ஓட்டல், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு பிரமிட் ஆன்மீக இயக்க அறக்கட்டளை, பிரெத் எனர்ஜி ெஹல்த் பவுண்டேஷன். காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.
திறப்பு விழா
நீர்மோர் பந்தல் திறப்பு விழா, ராக்கியாபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட காங்கிரஸ். காலை 10:00 மணி.
பிரிவு உபச்சார விழா
பணி ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் பிரிவு பச்சார விழா, ஏ.வி., அரங்கம், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். மதியம் 1:00 மணி.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., லட்சுமி மில் - மாலை 6:00 மணி. வடுக பாளையம், பல்லடம்.இரவு 7:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.