ADDED : ஏப் 08, 2025 06:15 AM
- ஆன்மிகம் -
ஏகாதசி விழா
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏகாதசி சிறப்பு பூஜை - காலை 9:00 மணி.
வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி. திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை - காலை, 6:00 மணி.
தேர்த்திருவிழா
பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு - காலை 9:00 மணி. நாதஸ்வர கச்சேரி - மாலை 6:00 மணி. பட்டினி அபிேஷகம் - இரவு 7:00 மணி. புஷ்பன விமான மலர் பல்லாக்கு - இரவு 8:00 மணி. அம்மன் அழைப்பு - 9:00 மணி. திருக்கல்யாணம் - 10:00 மணி. யானை வாகன உற்சவம் - 11:00 மணி.
குண்டம் திருவிழா
கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். குண்டம் இறங்கும் நிகழ்வு - அதிகாலை 4:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை 3:30 மணி.
கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார் புதுார், சிங்கனுார், கணபதிபாளையம், பல்லடம். மகாமுனி பலிபூஜை, கரும்பு வெட்டுதல், அம்மனுக்கு வெண்ணெய் சாற்றுதல் - அதிகாலை 2:00 மணி. குண்டம் இறங்கும் நிகழ்வு - அதிகாலை 5:00 மணி. சிறப்பு அபி ேஷகம், தீபாராதனை - காலை 8:00 மணி.
பொங்கல் விழா
சித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ தன்னாசியப்பன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மகா முனியப்பன், ஸ்ரீ ஏமக்கருப்பன், ஸ்ரீ வேட்டைக்காரர், ஸ்ரீ மாயவப் பெருமாள், மேட்டுக்காடு, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. கருப்பசாமி அழைத்தல் - அதிகாலை 3:00 மணி. மகா முனியப்பன் பரண் பூஜை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 2:00 மணி.
37ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். மூன்றாம் கால பூஜை - காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. வள்ளிகும்மியாட்டம் - மாலை 6:00 மணி.ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் - இரவு 7:00 மணி.
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமி நகர், 4வது வீதி, திருப்பூர். ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் இருந்து அம்மன் கும்பம் அழைத்து வருதல் - காலை 9:00 மணி. பால் அபிேஷகம், அலங்கார பூஜை - 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு கொண்டு வருதல் - மாலை 5:00 மணி. உள்ளி விழவு எனும் பெருஞ்சலங்கையாட்டம் - 6:30 மணி. ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வருதல் - இரவு 8:00 மணி.
ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில், தொரவலுார், பெருமாநல்லுார். அவரப்பாளையத்தில் இருந்து சக்தி கரகம், படைக்கலம் கோவிலுக்கு எடுத்து வருதல் - இரவு 8:00 மணி.
43ம் ஆண்டு பொங்கல் விழா, விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், மடத்துப்பாளையம் பிரிவு, அவிநாசி. பூவோடு திருவீதி உலா - காலை 5:00 மணி. அபிேஷகம் - இரவு 8:00 மணி. படைக்கலம், அம்மன் அழைத்தல் - இரவு 8:00 மணி.
மங்கள விநாயகர், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரிய கருணைபாளையம், வேலாயுதாம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்து ஆடுதல் - காலை 6:30 மணி. அம்மனுக்கு அபிேஷகம் - இரவு 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - இரவு 8:30 மணி.
ஸ்ரீ மாரியம்மன் கோவில், செம்பியநல்லுார், வெள்ளியம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்தல், அபிேஷகம் - காலை 6:30 மணி.
போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அம்மன் அழைத்து வருதல், படைக்கலம் - இரவு 8:00 மணி. ஆதிபராசக்தி அலங்காரம் - மாலை 5:00 மணி.
29ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். பூவோடு ஊர்வலம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.
n பொது -
ஆண்டு விழா
30வது கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.