ADDED : ஜூன் 05, 2025 01:43 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். பஞ்சகவ்யம், விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை ேஹாமம், பூர்ணாகுதி - காலை 8:30 மணி. கோபுரக் கலசம் வைத்தல், பரிவார தெய்வங்கள் அஷ்டபந்தனம் செய்தல் - காலை 11:30 மணி. ஐந்தாம் கால யாக பூஜை, - மாலை 5:00 மணி. மருந்து சாற்றுதல் - இரவு 9:00 மணி.
l சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை - காலை 9:00 மணி. கோபுரம் கலசம் வைத்தல், திரவ்யாகுதி, மூல விக்ரஹங்களுக்கு யந்திரஸ்தாபனம் - காலை 11:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. நான் காம் கால யாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி - காலை 9:00 மணி. ஐந்தாம் கால யாக பூஜை, தீபாராதனை - மாலை 5:00 மணி.
l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன்நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், மகா அபிேஷகம், பூர்ணாகுதி, கலசங்கள் புறப்பாடு - அதிகாலை 5:00 மணி. மகா கும்பாபிேஷகம், அலங்காரம், கோ பூஜை, அன்னதானம் - காலை 7:45 மணி. அழகு வள்ளி கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சி யம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, திருமுறை பாராயணம், வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, கோபுர விமான கலசங்களுக்கு அபிேஷக பூஜை, பிரதிஷ்டை செய்தல் - காலை 8:30 மணி. நவசக்தி அர்ச்சனை, உபசார வழிபாடு, எண்வகை மருந்து சாத்துதல் - மாலை 4:30 மணி.
வைகாசி விசாகத்
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு வாகனம், சேஷ வாகனத்தில் திருவீதி உலா, சிறப்பு அபிேஷகம் - மாலை 6:30 மணி. தேவி ஸ்ரீ நாட்டிய வித்யாலயா வழங்கும் ஆண்டாள் திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி.
குண்டம் திருவிழா
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வெள்ளகோவில். பூவோடு, பூக்குண்டம் இறங்குதல் - காலை 6:00 மணி.
பகவத் கீதை வகுப்பு துவக்கம்
ஸ்ரீமத் பகவத் கீதை தொடர் ஞான யஜ்ஞம் வகுப்பு துவக்கம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கலை பண்பாட்டு மையம் திருவருள் அரங்கம். பரநாட்டியம்: சாய்கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் மாணவியர் குழு - மாலை 5:30 மணி.
மண்டல பூஜை
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 120, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை, 4:30 மணி.
சுற்றுச்சூழல் தின விழா
உலக சுற்றுச்சூழல் தின விழா, அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்பகவுண்டன்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.
மரக்கன்று நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பனை மரக்கன்று நடும் விழா, தாமரைக்குளம், அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், அவிநாசி குளம் காக்கும் அமைப்பு. காலை 10:00 மணி.
நகை விற்பனை
கண்காட்சி
வசுந்தரா - நகை விற்பனை கண்காட்சி, பார்ச்சூன் பார்க், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை.
யோகாசன பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.