ADDED : ஜூலை 01, 2025 11:43 PM
n ஆன்மிகம் n
ஆனி திருமஞ்சனம்
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், திருப்பூர். நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 11:00 மணி, அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி.
l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் - காலை, 10:00 மணி.
l ஸ்ரீ ஆவுடைநாயகி உடனமர் ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம், திருப்பூர். மகன்யாசம் - காலை, 10:00 மணி, அபிஷேகம் - காலை, 10:30 மணி, அலங்கார பூஜை - மதியம், 12:30 மணி. பிரசாதம் வழங்குதல் - மதியம்,1:00 மணி.
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மகா கணபதி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சார்த்தி மகா கும்பாபிஷேகம், ஜீவ கலச அபிஷேகம் நடை சார்த்தி பூஜைகள், படித்தரம் தீர்மானித்தல் - காலை, 5:00 மணி. பெரிய பலிக்கலில் கர்ப்பன்யாசம் அத்தாழ பூஜை - மாலை, 7:00 மணி. சவுடாம்பிகா திருமண மண்டபத்தில் அன்னதானம் - காலை, 9:00 மணி முதல்.
l ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், திருப்பூர். மங்கள வாத்தியம்,ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா ஆரம்பம் - காலை, 9:00 மணி.
l ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம் நகர், 3வது வீதி, திருப்பூர். மங்கள இசை, நான்காம் கால வேள்வி - அதிகாலை, 4:00 மணி. மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம் - காலை, 5:00 மணி, கலசம் புறப்படுதல் - காலை, 5:45 மணி, கோபுரம் கும்பாபிஷேகம் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் - காலை, 6:00 மணி. ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் - காலை, 6:45 மணி. அன்னதானம் - காலை, 9:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை, 5:00 மணி, அம்மன் திருவீதி உலா - இரவு, 7:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர்பந்தல், சின்னாண்டிபாளையம், திருப்பூர். மங்கள இசை, 108 மூலிகை திரவிய ஹோமம் - காலை, 6:00 மணி, யாகசாலை வலம் வருதல், மஹா கும்பாபிஷேகம் - காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள், அன்னதானம் - காலை, 9:00 முதல்
முதலாம் ஆண்டு விழா
ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. மங்கள இசை - காலை, 5:30 மணி, திருப்பள்ளியெழுச்சி - காலை, 6:00 மணி, சாற்றுமுறை தீர்த்தபிரசாதம் - மதியம், 1:00 மணி, அர்ச்சனை ஆரம்பம் - மாலை, 5:00 மணி, அர்ச்சனை பூர்த்தி சாற்றுமுறை, மஹா தீபாராதனை - இரவு, 7:00 மணி.
ஆறாம் ஆண்டு விழா
செல்வ விநாயகர், வள்ளிதேவசேனா சமதே ஸ்ரீ சுப்ரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு கருவம்பாளையம். விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு பூஜை - காலை, 8:00 மணி. மஹா அபிஷேகம் - காலை, 10:00 மணி, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம் - காலை, 11:00 மணி, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம், 12:30 மணி.
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n
குடிநீர் திட்டம்
திறப்பு விழா
செஞ்சேரிமலை குடிநீர் திட்டம் திறப்பு விழா, நீர் வினியோகம் நிலையம், இடுவம்பாளையம். காலை, 9:15 மணி.
பொதுக்கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு பொதுகூட்டம், ஆர்.வி.ஈ. லே அவுட், காட்டுவளவு, திருப்பூர். மாலை, 5:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., பங்கேற்பு: நாஞ்சில் சம்பத்.
கடன் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல் இரவு, 9:30 மணி வரை.
இலவச காது
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்: 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்
n விளையாட்டு n
தெற்கு குறுமைய
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் தெற்கு குறுமைய உடற்கல்வி ஆய்வாளர்கள் ஆலோசனை கூட்டம், அரச உயர்நிலைப்பள்ளி, எஸ்.பெரிய பாளையம், திருப்பூர். காலை, 9:30 மணி.