sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூலை 18, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

குண்டம் திருவிழா

19ம் ஆண்டு குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், நொய்யல் நதிக்கரை, வளம் பாலம் அருகில், திருப்பூர். பூச்சாட்டுதல் பூஜை - மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை

ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜை, பெரியநாயகி உடனமர் ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம் - மாலை 5:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - இரவு 7:30 மணி.

n பொன்னுாஞ்சல் வைபவம், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின், திருப்பூர். இரவு 7:00 மணி.

தொடர் சொற்பொழிவு

பெரிய புராண தொடர் சொற்பொழிவு, மாரியம்மன் கோவில் மண்டபம், ராயர்பாளையம், பல்லடம். ஏற்பாடு: சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை. மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.

மண்டல பூஜை

ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை 6:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டி பாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.

n மாகாளியம்மன் கோவில், 3 செட்டி பாளையம், ரிங்ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

n பொது n

கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி

இருபதாவது கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி, ஏ.சி., ஹால், வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார். துவக்க விழா - காலை 10:00 மணி. கண்காட்சி அரங்கம் - காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. விஷாலினி மற்றும் மேஜிக் உலக சாதனையாளர் கவி பங்குபெறும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

மத்திய அமைச்சர் ஆய்வு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு - நேதாஜி அப்பேரல் பார்க், பெருமாநல்லுார். பங்கேற்பு: பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன். காலை 10:30 மணி.

வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம். காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

சிறப்பு முகாம்

அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

காது பரிசோதனைஇலவச முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்

தியாகி குமரன் காலனி, குமரன் கூட்டுறவு வங்கி திருப்பூர் - திருப்பூர் மாநகராட்சி. கே.வி.ஏ., மஹால் - காங்கயம், தேவாங்கர் குல வேளாளர் திருமண மண்டபம் - அவிநாசி, கோவிந்தபுரம் குமரப்பா வேளாளர் மண்டபம் - தாராபுரம். காலை 10:00 மணி முதல்.

n விளையாட்டு n

கபடி போட்டி

வடக்கு குறுமைய மாணவியர் கபடி, த்ரோபால் போட்டி, திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை 9:30 மணி.

பேட்மின்டன்

தெற்கு குறுமைய தனிநபர், குழு மாணவர் பேட்மின்டன் போட்டி, மோகன்ஸ் அகாடமி, புதுார் பிரிவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.

கால்பந்து

தெற்கு குறுமைய, 17 வயது மாணவர் கால்பந்து போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us