ADDED : ஆக 10, 2025 08:40 AM
ஆன்மிகம் n ஜெயந்தி விழா ஸ்ரீ ெஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 91வது ஜெயந்தி விழா, ராமகிருஷ்ண பஜனை மடம், ஓடக்காடு, திருப்பூர். மாலை, 6:30 மணி.
n பொது n 'நிட்ஷோ - 2025' பின்னலாடை இயந்திர கண்காட்சி, டாப்லைட் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
செயற்கை கால் அளவீடு மருத்துவ முகாம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை. ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு.
கிளை மாநாடு கோவம்ச திருமண மண்டபம், வடக்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். மாலை, 3:00 மணி முதல்.
கண் சிகிச்சை இலவச முகாம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி வளாகம், அன்பு இல்ல வளாகம், திருமுருகன்பூண்டி, திருப்பூர்.காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
ஆப்பரேஷன் சிந்துார் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி விஸ்வகர்மா திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஊர்வலம் - காலை, 8:30 மணி. ஏற்பாடு: காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, வழி கல்வி அறக்கட்டளை, பெருமாநல்லுார்.
இலவச மருத்துவ முகாம் எஸ்.எம்.எஸ்.எப்., இலவச மருத்துவ மையம், டி.ஜே., பார்க் ஆசிரம வளாகம், பல்லவராயன்பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 7:30 முதல் மதியம், 2:30 மணி வரை.
சிரிப்பு மன்றம் சிரிப்போம் சிந்திப்போம் மன்றம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி. பங்கேற்பு: டாக்டர் சந்தானகிருஷ்ணன்.
தேசிய நெசவாளர் தினவிழா குமரன் சிலை அருகில், திருப்பூர். கொடியேற்றம் - காலை, 10:00 மணி, குருபூஜை, நெசவாளர் தின கொண்டாட்டம் - கே.ஆர்.எஸ்., திருமண மண்டபம், திருப்பூர். காலை, 11:30 முதல் மதியம், 1:30 மணி வரை.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா விஸ்வாஸ் மஹால், திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை. பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி. ஏற்பாடு: எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை.
நுால் வெளியீட்டு விழா தாய்த்தமிழ் பள்ளி, வள்ளலார் நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 10:00 மணி.
'கிட்டதான் - 2025' குழந்தைகளுக்கான மாரத்தான் ஓட்டம், சிவா நிகேதன் பள்ளி, மங்கலம், திருப்பூர். காலை, 8:00 மணி முதல்
பெற்றோருக்கு பாத பூஜை புளியவலசு, தாராபுரம் ரோடு, திருப்பூர். பாராயணம், சாய் பஜன் - மாலை, 4:20 மணி, வரவேற்பு - மாலை, 5:15 மணி, பாதபூஜை - 5:20 மணி, மங்கள ஆரத்தி - மாலை, 6:50 மணி.
பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் ஸ்ரீ சத்ய சாய் மந்திர், பி.என்., ரோடு, திருப்பூர். சாய் பஜன் - காலை, 8:30 மணி, வரவேற்பு - காலை, 8:50 மணி, பேரிடர் மேலாண்மை பயிற்சி துவக்கம் - காலை, 9:00 முதல், 1:00 மணி வரை. பயிற்சி சான்றிதழ் வழங்குதல் - மதியம், 2:00 மணி.
மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
கலிக்கம் முகாம் மூலிகை கண் சொட்டு மருந்து, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n 'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் நிப்ட்-டீ கல்லுாரி மைதானம், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல். ஏற்பாடு: திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் டெக்னோ ஸ்போர்ட்ஸ்.
பூப்பந்தாட்டம் தேர்வு போட்டி மாவட்ட அளவில் ஐவர் தேர்வு திறன் பூப்பந்தாட்ட போட்டி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை, 8:00 மணி முதல்.