ADDED : செப் 06, 2025 06:44 AM
n ஆன்மிகம் n
கும்பாபிஷேக ஆண்டு விழா ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில். ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். மங்கள இசை - அதிகாலை 5:00 மணி; கோ பூஜை, நான்காம் கால பூஜை, கலசங்கள் புறப்பாடு, மூலஸ்தான அபிஷேகம் - அதிகாலை 5:15 மணி; தாடங்கம் சாற்றுதல், ஆச்சார்யார் உற்சவம் - காலை 7:45 மணி; பிரசாதம் வழங்கல் - காலை 10:30 மணி.
அன்னை மரியா பிறப்பு பெருவிழா புனித கத்ரீனம்மாள் சர்ச், குமரன் ரோடு, திருப்பூர். அன்னையும் செபவாழ்வும் தலைப்பில் செபமாலை. மாலை 5:30 மணி.
நபியின் புகழ்பாடும் பேரணி திருப்பூர் பெரியபள்ளிவாசலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சி.டி.சி. பஸ் ஸ்டாப் வரை. காலை 9:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 10:00 மணி.
n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில். மங்கலம் கிராமம், அக்ரஹாரபுத்துார், திருப்பூர். மாலை 7:00 மணி.
n ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளி யம்மன் கோவில். போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம் 7வது வார்டு, என்.ஜி.ஆர்., கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 4:00 மணி.
n பொது n தொழில் வளர்ச்சி பயிலரங்கம் ஹார்ட்புல்னஸ் மெடிடேஷன் சென்டர், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
'மீண்டும் சந்தித்தோம்' 'பசுமை நிறைந்த நினைவுகளே மீண்டும் சந்தித்தோம்' என்ற தலைப்பில் மகளிர் பேரவை. ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை.
'ரெய்ஸிங் ஸ்டார்ஸ் 2025' 'ரெய்ஸிங் ஸ்டார்ஸ் லிட்டில் சாம்ப்ஸ் விழா 2025', தி ஹோம் ஸ்கூல் வளாகம், திருப்பூர். பங்கேற்பு: சென்சுரி பள்ளி தாளாளர் சக்திதேவி. காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை.