n ஆன்மிகம் n கந்த சஷ்டி திருவிழா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம், திருப்பூர். நான்காம் நாள் அபிஷேக ஆராதனை திருவுலாக்காட்சி. மாலை 5:00 மணி.
l ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். அபிஷேகம், நீல பூக்கள் அலங்காரம் - காலை 10:30 மணி.
l கனககிரி வேலாயுத சுவாமி கோவில், கண்டியன்கோவில் கிராமம், குளத்துப்பாளையம், திருப்பூர். அபிஷேகம், கந்தர் சஷ்டி பாராயணம் - காலை, மாலை 6:00 மணி.
l அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா. ஸ்ரீ ஷண்முகம் மஹால், ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் வளாகம், அலகுமலை. யாகசாலை பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை - காலை 8:30 மணி. பூர்வாங்க பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் ஸ்ரீ ஸ்கந்த சப்தசதீ மஹாயாக விழா துவக்கம் - மாலை 5:30 மணி.
l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சத்ரு சம்ஹார ஹோமம் - காலை 9:15 மணி. அபிஷேகம் - காலை 11:00 மணி. மஹா தீபாராதனை - மதியம் 12:00 மணி.
l வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ர மணியசுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிஷேகம் - காலை 10:00 மணி. தீபாராதனை - மதியம் 12:00 மணி.
l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி விசாலாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில், நல்லுார். அபிஷேக ஆராதனை பூஜை. காலை 10:00 மணி.
முப்பெரும் விழா ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பூச்சக்காடு. அன்னதான மடம் கிரஹப்பிரவேஷம், ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்மன் ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமி பிரதிஷ்டை, ஸ்ரீ கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம். மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை - காலை 10:00 மணி.
n பொது n மரக்கன்று நடும் விழா 'வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில், சென்னி மலை சாலையிலுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் இடத்தில் மரக்கன்று நடும் விழா. பங்கேற்பு: கலெக்டர் மனிஷ் நாரணவரே, எஸ்.பி., கிரீஷ் அசோக் யாதவ், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் போஜ், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், உதவி ஆணையர்கள் நந்தகுமார், தமிழ்வாணன். காலை 8:00 மணி.
பாராட்டு விழா கல்லுாரி கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற வர்களுக்கு பாராட்டு விழா. அரசு கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசி. மதியம் 2:00 மணி.
பொதுக்கூட்டம் பா.ம.க. சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பொதுக்கூட்டம். பங்கேற்பு: பா.ம.க. தலைவர் அன்புமணி. அரிசிக்கடை வீதி, மத்திய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். மாலை 5:00 மணி.
சிறப்பு முகாம் சாலையோர வியாபாரி களுக்கு அடையாள அட்டை, வியாபார சான்று வழங்கும் முகாம். வேலம்பாளையம் மண்டல அலுவலகம், நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகம், நல்லுார் மண்டல அலுவலகம் மற்றும் முருகம்பாளையம் மண்டல அலுவலகம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மன வளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள் - காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் - காலை 10:00 முதல் 12:00 மணி வரை.
n விளையாட்டு n மாவட்ட விளையாட்டு போட்டி மாணவருக்கான பால் பேட்மின்டன் - சிக்கண்ணா அரசுக்கல்லுாரி, திருப்பூர். மாணவருக்கான பீச் வாலிபால் - வித்ய விகாசினி பள்ளி, காங்கயம் ரோடு, திருப்பூர்; சிலம்பம் - ஸ்ரீ அலகுமலை வித்யாலயா பள்ளி, அலகுமலை. மாணவருக்கான கூடைப்பந்து - நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

