n ஆன்மிகம் n
மண்டல பூஜை 66ம் ஆண்டு மண்டல பூஜை. ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ஹோமம் - காலை 5:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை 10:00 மணி. பறையெடுப்பு - இரவு 7:00 மணி. மகா விஷ்ணு பூஜை - இரவு 7:30 மணி.
பகவத்கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி.
வேல் வழிபாடு ஸ்ரீ தில்லை நாயகி உடனமர் ஸ்ரீ சோளீஸ்வர சுவாமி கோவில், சாமளா புரம். ஏற்பாடு: இந்து அன்னையர் முன்னணி. மாலை 5:30 மணி.
தைப்பூச தேர்த்திருவிழா தேர் முகூர்த்தக்கால் நடுதல், சுப்ரமணியசுவாமி கோவில், சிவன்மலை. ஏற்பாடு: ஹிந்து சமய அறநிலையத்துறை. காலை 9:00 மணி.
n பொது n மருத்துவ முகாம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவாங்கபுரம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
l சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., கண் பரிசோதனை முகாம். ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 11:30 மணி வரை. மாலை 6:30 முதல் 8:00 மணி வரை.
யோகா பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி. குலாலர் திருமண மண்டபம், திருப்பூர். காலை, மாலை 6:00 முதல் 8:30 மணி மற்றும் காலை 10:30 முதல் 1:00 மணி வரை.
l மனவளக்கலை யோகா. எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ண சாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.

