ஆன்மிகம்
ஏகாதச ருத்ர பாராயணம் ஸ்ரீ சத்ய சாய் விஹார், பி.என்.ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
வார்ஷிக ஆராதனை ஸ்ரீ மஹாபெரியவாளின் 32வது வார்ஷிக ஆராதனை விழா, ராமகிருஷ்ண பஜனை மடம், காவேரி வீதி, ஓடக்காடு, திருப்பூர். ஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைக்கு அபிேஷகம், ஆராதனை - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.
அர்ப்பணிக்கும் பெருவிழா 63 நாயன்மார்கள் திருமேனியை அர்ப்பணிக்கும் பெருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சி அம்மன் கோவில், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு குலால உடையார் அறக்கட்டளை. கோட்டை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் இருந்து, 63 நாயன்மார்கள் திருவீதி உலா புறப்படுதல் - காலை 7:20 மணி. திருமேனிகளுக்கு மகா தீபாராதனை - 10:45 மணி. பிரசாதம் வழங்குதல் - மதியம் 1:30 மணி.
சிறப்பு பஜனை ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில், கடைவீதி, என்.ஜி.ஆர். ரோடு, பல்லடம். அய்யப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை - மாலை 6:00 மணி.
மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. சிறப்பு அன்னதானம் - மதியம் 12:00 முதல் மாலை 3:00 மணி வரை. சண்முகாலயா நாட்டிய நிகழ்ச்சி - 6:45 மணி.
66ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ அய்யப்பசுவாமி கோவில், சந்தைப்பேட்டை, பல்லடம். மங்கள வாத்தியம், விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், காயத்ரி மந்திர ேஹாமம், 108 சங்காபிேஷகம், அலங்கார தீபாராதனை - அதிகாலை 5:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. கெஜ வாகனத்தில் அய்யப்ப சுவாமி திருவீதி உலா - மாலை 5:00 மணி.
தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொது கருத்தரங்கம் வலசை பறவைகளின் வருகை குறைவு எனும் தலைப்பில் கருத்தரங்கம், ரோட்டரி அரங்கம், ரோட்டரி மெட்ரிக் பள்ளி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் இயற்கை கழகம். மதியம் 1:30 மணி.
விழிப்புணர்வு ஓட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு மாராத்தான், ஸ்ரீ ராம் சந்திர மிஷன் வளாகம், பல்லவராயன்பாளையம், உகாயனுார், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் அமைப்பு. காலை 6:00 மணி.
பயிலரங்கம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக பயிலரங்கம், வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். கிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம். டி.கே. மஹால், அலங்கார் தியேட்டர் அருகில், பல்லடம். ஏற்பாடு: பா.ஜ. காலை 9:00 மணி முதல்.
விவசாயிகள் கருத்தரங்கு 'தோட்டக்கலை பயிர்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான கருத்தரங்கு, பொன்னுசாமி கவுண்டர் மஹால், பெருமாநல்லுார். ஏற்பாடு: தோட்டக்கலை, மலைபயிர்கள் துறை. வயல்வெளி செயல் விளக்கம் - காலை 11:00 மணி.
விழிப்புணர்வு நிகழ்ச்சி 'தொழில் வழிகாட்டும் ஆலோசனை' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, வேதாந்தா அகாடமி, ஊஞ்சப்பாளையம், அவிநாசி. காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை.
இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சென்னிமலைக்கவுண்டன்புதுார், ஆட்டையம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பழக்குடோன் பஸ் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பழனிச்சாமி பொன்னம்மாள் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
மருத்துவ முகாம் பணிரெண்டார் திருமண மண்டபம், யூனியன் மில் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: மக்கள் நண்பன் குணசேகரன் சமூக நல அறக்கட்டளை. மருத்துவ பரிசோதனை, கண் அறுவை சிகிச்சை, ரத்ததான முகாம் - காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
ஆண்டு விழா பிரபஞ்ச அமைதி அறக்கட்டளை ஆதரவற்றோர் இலவச முதியோர் காப்பகம் மூன்றாம் ஆண்டு விழா, செங்காட்டுத்தோட்டம், ஒடக்கல்பாளையம், சூலுார். காலை 6:00 மணி.
நகை கண்காட்சி ஜூவல்லரி எக்ஸ்போ - நகை கண்காட்சி, பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜெலானி ஜூவல்லரி மார்ட். காலை 10:00 மணி முதல்.
ஆனந்த அனுபவ பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.
காயகல்பம் வகுப்பு சிறப்பு காயகல்பம் வகுப்பு, சிங்காரவேலன் நகர் அறிவுத்திருக்கோவில், பத்மாவதிபுரம். காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

