n ஆன்மிகம் n சிறப்பு பூஜை தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, ஸ்ரீ கருணாம்பிகை சமேத, ஸ்ரீ கண்டீஸ்வர சுவாமி கோவில், கண்டியன் கோவில், திருப்பூர். மாலை 5:00 மணி.
n பெரிய நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில், அலகுமலை. மார்கழி மாத கால பைரவர் அஷ்டமி யாக வேள்வி பூஜை, மரிக்கொழுந்து அலங்காரம் - மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.
மார்கழி அருள் மழை 'திருமந்திர சிந்தனை' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. சிறப்பு வழிபாடு - மாலை 4:30 மணி. வெள்ளகோவில் சிவலோகநாதர் கோவில் அன்பர்கள் கோலாட்டம் - மாலை 4:45 மணி. 'உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு; நிகழ்த்துபவர் - சிவக்குமார். மாலை 5:45 மணி.
மார்கழி பாராயணம் திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.
மார்கழி கலை விழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். குரல், வயலின், பரத நாட்டியம் - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.
தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன். மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.
மார்கழி உற்சவம் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.
n பொது n 'தேடல் - 2026' மெகா கேரியர் கவுன்சிலிங் - 2026, பழனியப்பா இன்டர்நேஷனல் ஸ்கூல், கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் செலிபிரேஷன், ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன். பங்கேற்பு: கல்வியாளர் ஜெயப்பிரகாஷ், தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ். காலை 9:30 மணி முதல்.
குறைகேட்பு கூட்டம் ரேஷன் குறைகேட்பு கூட்டம், கருணைபாளையம் (அவிநாசி), எஸ்.ஆலம்பாளையம் (தாராபுரம்), முத்துார் (காங்கயம்), பொங்கலுார் (பல்லடம்), நெருப்பெரிச்சல் (திருப்பூர் வடக்கு), குப்பாண்டம்பாளையம் (திருப்பூர் தெற்கு), மூங்கில்தொழுவு (உடுமலை), குன்னத்துார் (ஊத்துக்குளி) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள். ஏற்பாடு: பொது வினியோகத்துறை. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
செம்மொழி வார விழா ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருள்புரம், பல்லடம். 'தமிழ் என்னும் அமுதசுரபி' எனும் தலைப்பில் கருத்தரங்கம். நிகழ்த்துபவர் - தன்னம்பிக்கை பேச்சாளர் புவனேஸ்வரி. காலை 9:30 முதல் 11:30 மணி வரை.
புத்தக கண்காட்சி புத்தக கண்காட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
பொதுக்கூட்டம் இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி பொதுக்கூட்டம், அம்மன் திடல், அனுப்பட்டி, பல்லடம். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். மாலை 5:00 மணி.
உலக அமைதி வார விழா மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆண்டவர் காலனி தவமையம், அவிநாசி. நல்வழி நடந்தால் எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n விளையாட்டு n பூப்பந்து போட்டி 41ம் ஆண்டு அகில இந்திய, மாநில ஐவர் பூப்பந்து போட்டி, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இமாலயா விளையாட்டுக்குழு. காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை.

