ADDED : பிப் 07, 2026 05:21 AM
n ஆன்மிகம் n சிவாங்கா பாதயாத்திரை துவக்கம் சிவாங்கா ரதம், பாத யாத்திரை துவக்கம், ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: தென் கயிலாய பக்தி பேரவை. குருபூஜை, பாதயாத்திரை துவக்கம் - காலை 10:00 மணி.
கும்பாபிேஷக விழா ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில், திருமுருகன்பூண்டி. விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக வேள்வி, எண்வகை மருந்து சாற்றுதல், பூர்ணாகுதி - காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி. விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 4:30 மணி முதல் இரவு 8:45 மணி.
l ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். கணபதி ஹோமம், கோ பூஜை, புதிய கோபுர கலசம் வைத்தல் - காலை 7:00 மணி. தீர்த்தக்கலசம், முளைப்பாலிகை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்படுதல் - காலை 10:00 மணி. முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 4:00 மணி. யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 7:00 மணி.
சிறப்பு பஜனை ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மாலை 6:30 மணி.
ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காமநாயக்கன்பாளையம், பல்லடம். மாலை 6:30 மணி.
துவக்க விழா 13ம் ஆண்டு துவக்க விழா, ஸ்ரீ அதர்வனபத்ரகாளி பிரத்யங்கிராதேவி பீடம், வி.ஐ.பி. நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். வேத பாராயணம், விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், கலச பூஜை, பூர்ணாகுதி - காலை 8:00 மணி. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, பரிவார தேவதா ேஹாமம், பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 மணி.
தைப்பூசத் தேர்த்திருவிழா ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். காலசந்தி பூஜை - காலை 6:00 மணி. மஹா தரிசனம் - காலை 9:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
l ஸ்ரீ விஜய கணபதி கோவில், ஆலங்காடு, வீரபாண்டி, திருப்பூர். மாலை 6:30 மணி.
குண்டம் திருவிழா 81வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. சிறப்பு அபிேஷகம் - மாலை 6:00 மணி.
n பொது n மருத்துவ ஆலோசனை முகாம் சிறுநீரக பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம், மாதேஸ்வரி மருத்துவ மனை, முத்துசெட்டிபாளையம் மெயின் ரோடு, அவிநாசி. காலை 9:00 முதல் மதியம் 1:00மணி வரை.
லேப்டாப் வழங்கும் விழா கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் விழா, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காங்கயம். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். காலை 9:30 மணி.
மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, மருத்து முகாம், சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
முத்தமிழ் விழா விவேகானந்தர் அரங்கம், பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. இலக்கிய கருத்தரங்கம் - மாலை 4:30 மணி. 'தமிழும் இசையும்' எனும் தலைப்பில் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சமர்ப்பா குமரன் -மாலை 5:00 மணி.
இலவச மருத்துவ முகாம் மாவட்ட கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, டாக்டர் அகர்வால் மருத்துவமனை. காலை 9:45 மணி.

