தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர்: இன்று இனிதாக 

திருப்பூர்: இன்று இனிதாக 

திருப்பூர்: இன்று இனிதாக 


ADDED : மார் 21, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஸ்ரீராமநவமி மஹோத்சவம்

ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையம், மகாலட்சுமிநகர் மேற்கு, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இஸ்கான் கோவை அமைப்பு. ஹரி நாம சங்கீர்த்தனம் - காலை 11:00 மணி. ஸ்ரீ ராம நவமி சிறப்பு உபன்யாசம் - மதியம் 12:00 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 1:00 மணி.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

நகைச்சுவை அரங்கம்

'வாங்க சிரித்து மகிழ்வோம்' எனும் தலைப்பில் நகைச்சுவை அரங்கம், பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், சேவூர் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம். மாலை 5:30 மணி.

கட்டட திறப்பு விழா

முதியோர் காப்பகம் புதிய கட்டட திறப்பு விழா, அருட்ஜோதி தபோவனம், சிவபுரம், லட்சுமிநாயக்கன்பாளையம், செலக்கரிச்சல். ஏற்பாடு: வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை. காலை 8:00 மணி.

இலவச மருத்துவ முகாம்

டாக்டர் அரவிந்த்ஸ் கருத்தரித்தல் மையம், ஸ்ரீ சஷ்டி கிளினிக், மக்கள் மருந்தகம் அருகில், அவிநாசி. காலை 9:00 மணி.

பயிற்சி வகுப்பு

ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, டவுன்ஹால் அரங்கம், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு சட்டசபை தேர்தல் அலுவலர்கள். காலை 10:00 மணி.

சங்கமம் விழா

பணி ஓய்வு பெற்ற கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட போலீசார் பங்கேற்கும் சந்திப்பு நிகழ்ச்சி, ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி அரங்கம், திருமுருகன்பூண்டி. காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.

முப்பெரும் விழா

உலக சிட்டுக்குருவிகள் தினம், காடுகள் தினம், தண்ணீர் தினம் முப்பெரும் விழா, பருவாய் பூங்கா, ஏற்பாடு: பருவாய் பசுமை அமைப்பு. மாலை 4:00 மணி.

கருத்துகேட்பு கூட்டம்

தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம், ராஜூ பவன், மாவட்ட காங். அலுவலகம், பின்னி காம்பவுண்ட், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட காங். மாலை 5:00 மணி.

விளையாட்டு

கபடி போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கபடி போட்டி, கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகம். காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us