ADDED : ஜூன் 23, 2026 07:43 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் சுவாமி, மஹா மாரியம்மன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார், திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 8:30 முதல் மதியம், 11:00 மணி வரை. மூன்றாம் கால யாக பூஜை - மாலை 5:30 மணி. குருேஹாரையில் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 7:00 மணி.
முனியப்புச்சி சுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில், பெரியநாதம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. கணபதி ேஹாமம், லட்சுமி பூஜை, கோ பூஜை - காலை 6:00 மணி. பிம்ப சுத்தி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் - மதியம் 12:00 மணி. முதல் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி.
கும்பாபிேஷக ஆண்டு விழா ஸ்ரீ பூமி நீளாநாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சிறப்பு ஹோமம், கலச புறப்பாடு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரை. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சிறப்பு ேஹாமம், கலச புறப்பாடு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 6:15 முதல், 8:00 மணி வரை.
திருவாசகம் தொடர் வகுப்பு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். சொற்பொழிவு நிகழ்த்துபவர்: சிவ சண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை. மாலை, 5:00 முதல், இரவு, 7:00 மணி வரை.
தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். கொடியேற்றம், சுவாமி திருவீதி உலா, துவாஜரோஷணம் - காலை 9:00 மணி. சுவாமி அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி. கற்பக விருட்சக வாகன காட்சி, சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ பட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
பொது மகளிர் பேரணி போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, பெண்கள் பேரணி, தெற்கு உழவர் சந்தை முன்புறம் துவங்கி, கலெக்டர் அலுவலக வளாகம் வரை, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். மாலை 3:00 மணி.
கருத்தரங்கம் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் கடன் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், ஏற்பாடு: மாவட்ட தொழில் மையம். வட்டார வளர்ச்சி அலுவலகம், அவிநாசி - காலை 10:00 முதல் 12:30 மணி வரை. வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பூர் - மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை.
குறைகேட்பு கூட்டம் முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.
ஆர்ப்பாட்டம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரவுண்டானா சந்திப்பு, சேவூர், அவிநாசி. ஏற்பாடு: தமிழக விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
