தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஆக 21, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

* ஸ்ரீசக்தி விநாயகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி – காலை 6:00 மணி. விமான கலசம் நிறுவுதல் – காலை 8:15 மணி. இரண்டாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு – காலை 10:00 மணி. மூலமூர்த்திகள் திரு உறக்கம் செய்தல் – மதியம் 12:30 மணி. மூன்றாம் கால வேள்வி பூஜை, 108 வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் ஆகுதி, நிறையாகுதி – மாலை 5:30 மணி. எண்வகை மருந்து சாற்றுதல் – இரவு 7:30 மணி.

* சுப்பராயசுவாமி, மல்லம்மா கோவில், ராயர்பாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்ட பந்தனம் – மாலை 5:00 மணி.

பொது

நொய்யல் நதி

நற்காப்பு விழா

நல்லம்மன் தடுப்பணை, மங்கலம், திருப்பூர். வருண ஜப ஹோமம், கங்கா ஆரத்தி பூஜை மற்றும் சர்வ சமய பிரார்த்தனை – அதிகாலை 4:30 முதல், 6:00 மணி வரை. மராத்தான் ஓட்டம் – காலை 6:00 மணி. நல்லம்மன் தடுப்பணை அருகே அன்னதானம் – காலை 8:00 மணி. 10 ஆயிரம் மரக்கன்று நடவு செய்யும் துவக்க விழா – காலை, 8:30 மணி. உதயம் பவுண்டேஷன் க்யூஆர் கோடு வெளியீட்டு விழா – காலை 8:45 மணி. ஏற்பாடு: உதயம் பவுண்டேஷன்.

ஆண்டு விழா

பள்ளி ஒன்பதாம் ஆண்டு விழா, சென்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளி, ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி.

பதவியேற்பு விழா

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பிருந்தாவன் ஓட்டல், ஹார்வி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன். மாலை 4:00 மணி.

ஆர்ப்பாட்டம்

குஜிலியாம்பாறை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம், எதிரில், திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ. காலை 10:00 மணி.

நிட்ேஷா கண்காட்சி

அதிநவீன பின்னலாடை தொழில்நுட்ப இயந்திரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் நிட்ேஷா கண்காட்சி, டாப்லைட் வளாகம், மணி மஹால் பஸ் ஸ்டாப், காங்கயம் ரோடு, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

விளையாட்டு

கோ கோ போட்டி

வடக்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர் கோ கோ போட்டி, ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:30 மணி.

ேஹண்ட்பால்

தெற்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவியர் ேஹண்ட்பால் போட்டி, எம்.என். முருகப்பா செட்டியார் மேல்நிலைப்பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

கால்பந்து போட்டி

தெற்கு குறுமைய மாணவியர் கால்பந்து இறுதி போட்டி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

ஹாக்கி போட்டி

தெற்கு குறுமைய மாணவர் ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us